தமிழக செய்திகள்,

தமிழக செய்திகள்,30.11.2022




சென்னை: வாரம் 7 நாளும் மேட்டுப்பாளையம் - கோவை இடையே ரயில் இயக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கையை ஏற்று ஒப்புதல் வழங்கிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு நன்றி என எல்.முருகன் தெரிவித்துள்ளார்*

சென்னை: தமிழகத்தில் 1,000 புதிய அரசுப்பேருந்துகள் வாங்க ரூ.420 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு பேருந்துக்கு தலா ரூ.42 லட்சம் என மதிப்பீடு செய்து ரூ.420 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.*

சென்னை: பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்க ரூ.180 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது. கண்ணகிநகர் - ஈச்சம்பாக்கம் இடையே சாலைகளை அகலப்படுத்தி பக்கிங்ஹாம் கால்வாய் மீது சுழற்சலை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.*

சென்னை: சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்  டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் உருவச்சிலையும் நிறுவப்படும் என முதல்வர் கூறியுள்ளார். ரூ.7,500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி