உவமைக் கவிஞர் சுரதா 102 வது பிறந்த நாள்

 உவமைக் கவிஞர் சுரதா 102 வது பிறந்த நாள் 

*


சுடரும் சொற்கள்

'சுரதா'வுடையவை.


ஒளிவீசும் உவமை

ஒவ்வொன்றும் 

ஒரு நட்சத்திரம்.


உவமைக் கவிஞருக்கு உவமை கூற உவமை ஒன்றில்லை. 


சிந்தனையின் வேகத்தில்

சிறகடிக்கும் புயல் பறவை.


பந்தயக்

குதிரையின் பாய்ச்சல்தான் 

சீறி வரும் சந்த நயம்.


மரபோடு புதுமைகளை

மணிமணியாய்க் கோர்த்தார்


அணிகலனாய் அதைச் சூட்டி 

தமிழை அழகு பார்த்தார்.


*

அவரது பாடல்களில் ஒன்று: 


"கண்ணில் வந்து

மின்னல் போல் காணுதே

இன்ப காவிய கலையே ஓவியமே


சுடர் மின்னல் கண்டு

தாழை மலருவது போலே

உனை கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே


நீல வானம் இல்லாத

ஊரே இல்லை

உலகினில் மழை இன்றி

ஏதும் இல்லை

அமுதே உனை அன்றி

வாழ்வே இல்லை"


 *

அவர் எழுதிய வசனம் ஒன்று:


"ஒரு நாட்டை மகுடங்கள் ஆட்சி செய்யக்கூடாது

மக்களின் எண்ணங்கள்தான் ஆள வேண்டும்"


படம்: மங்கையர்க்கரசி

*

உவமைக் கவிஞர் #சுரதா அவர்களின் 102 வது பிறந்த நாளில் அவர் நினைவைப் போற்றுவோம்.

*

 பிருந்தா சாரதி


*

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்