திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் உண்டியல் காணிக்கை ரூ.122 கோடி*

 


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் உண்டியல் காணிக்கை ரூ.122 கோடி*


திருமலை: திருமலை அன்னமைய்யா பவனில் நேற்று தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி கலந்துக்கொண்டு பக்தர்கள் நிறை, குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:


மீண்டும் சர்வ தரிசன டோக்கன்கள் திருப்பதியில் கடந்த 1-ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. சனி, ஞாயிறு, திங்கட்கிழமைகளில் தினமும் 25 ஆயிரம் டோக்கன்களும், மற்ற வார நாட்களில் தினமும் 15 ஆயிரம் டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் அன்றே சுவாமியை குறிப்பிட்ட நேரத்தில் தரிசிக்கலாம். டோக்கன் பெறாத பக்தர்களும் நேரடியாக திருமலைக்கு சென்று, வைகுண்டம்-2 காம்ப்ளக்ஸ் வழியாக சென்று இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்கலாம். வரும் 8-ம் தேதி, சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் 12 மணி நேரம் நடை அடைக்கப்படும். ஸ்ரீநிவாச திருக்கல்யாண நிகழ்ச்சிகள் நவம்பர் 5-ம் தேதி ஜெர்மனியிலும், பாரீஸில் நவம்பர் 6-ம் தேதி முதலும், லண்டனில் நவம்பர் 16-ம் தேதியும், ஸ்காட்லாந்தில் நவம்பர் 13-ம் தேதியும் நடைபெறும்.


கடந்த அக்டோபர் மாதத்தில் ஏழுமலையானை 22.74 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர். ரூ.122.83 கோடி உண்டியல் மூலம் காணிக்கையாக கிடைத்துள்ளது. 1.08 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 60.91 லட்சம் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 10.25 லட்சம் பேர் தலைமுடியை காணிக்கை செலுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,