*தமிழகத்தில் நாளை முழு சந்திர கிரகணம்: பொதுமக்கள் மாலையில் பார்க்கலாம்*


*தமிழகத்தில் நாளை முழு சந்திர கிரகணம்: பொதுமக்கள் மாலையில் பார்க்கலாம்*


சென்னை: முழு சந்திர கிரகணம் நாளை வானில் நிகழ்கிறது. தமிழகத்தில் நாளை  மாலையில் இதை பகுதி கிரகணமாக நாம் பார்க்க முடியும். சந்திர கிரகணம் என்பது பூமியின் நிழல்  நிலவின் மீது விழும்போது ஏற்படுவது. பூமியின் நிழல்  கரு நிழலாக விழும் பகுதி ‘அம்பரா’ என்றும் அதன் புற நிழல்  பகுதி ‘பெனும்பரா’ என்றும் அழைக்கப்படுகிறது.


கரு நிழல் என்பது  நிலவின் மீது முழுவதும் விழுவது முழு சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. புற நிழல் பகுதியானது கண்ணுக்கு அவ்வளாவாக தெளிவாக தெரிவதில்லை. சந்திர கிரகணம்  முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். சூரியன் பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில்   இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும்.  முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.


நாளை முழு சந்திர கிரகணம் இந்தியாவில் ஏற்படுகிறது.  இந்தியாவின் அனைத்து இடங்களிலும்  இந்த  முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியாது. ஏனென்றால் மாலையில் சந்திரன் உதயமாகும் முன்பே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டு இருக்கும் என்பதால் நம்மால் பார்க்க முடியாது.  முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின்  முடிவுகளை நாட்டின் கிழக்கு பகுதிகளில் காண முடியும். இந்தியாவின் கிழக்கு பகுதிக்கு செல்லச் செல்ல சந்திர கிரகணத்தை பார்க்க முடியும். இந்த பகுதிகளில் சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் ஏற்படும்.


மேற்கு வானில் சூரியன் மறையும் போது கிழக்கு வானில் நிலவு தோன்றும் நேரத்தில் குறைவான கால கட்டத்தில் பகுதி சந்திர கிரகணத்தை நாம் பார்க்க முடியும். இந்த கிரகணம் தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா, வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் தென்படும். தமிழகத்தில் சென்னையில் சந்திரன் உதிக்கும் நேரம் இந்திய நேரப்படி மாலை 5 மணி 39 நிமிடங்கள். சந்திர கிரகணத்தை  40 நிமிடங்கள் காண முடியும்.


சந்திரனின் புற நிழல் பகுதி தொடக்கம் என்பது மதியம் 1.30 மணிக்கு தொடங்கும். சந்திரனின் கரு நிழல் பகுதி  மதியம் 2.38 மணிக்கு தொடங்கும். முழு சந்திர கிரகணம் மதியம் 3.45 மணிக்கு தொடங்கும்.  முழு சந்திர கிரகணம் மாலை 4.18 மணிக்கு ஏற்படும்.  முழு சந்திர கிரகணம்  மாலையில் 5.11 மணிக்கு முடியும். சந்திர கிரகணத்தின் கரு நிழல் பகுதி மாலை 6.19 மணிக்கு விலகும். சந்திரனின் புற நிழல் பகுதி 7.27 மணிக்கு விலகும். கிரகணம் ஏற்படும் போது நிலவு சிவப்பு நிறமாக மாறும். வெள்ளை ஒளிக்குள் ஏழு நிறங்கள் இருப்பதால், நீல ஒளியானது பூமியின் வளி மண்டலத்தில் ஒளிச் சிதறல் அடைகிறது.


இதன் காரணமாக வானம் நீல நிறமாக மாறுகிறது. அதேபோல, ஒளியானது  வளி மண்டலத்தின் வழியே செல்லும்போது சிவப்பு நிறமான ஒளி விலகல் அ டைகிறது. அது நிலவின் மீது படுகிறது. இதன் காரணமாக நிலவு சிவப்பு நிறமாக தெரியும். இதையடுத்து, அடுத்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் நாம் அடுத்த ஆண்டு 2023 அக்டோபர் 28ம் தேதி தான் பார்க்க முடியும்.

...


*

[07/11, 1:34 pm] +91 99407 62319: *மக்கும் குப்பைகளை வீட்டிலேயே இயற்கை உரமாக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு: கணுவாப்பேட்டை அரசுப் பள்ளி மாணவி அசத்தல்*


புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளி மாணவி ஒருவர், குப்பைகளை கொண்டு வீட்டிலேயே, குறுகிய காலத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளார்.


புதுச்சேரி அடுத்த வில்லியனூர் கணுவாப்பேட்டை அரசு உயர் நிலைப் பள்ளி மாணவி வனஜா. இவர், குப்பைகளை கொண்டு வீட்டிலேயே குறுகிய காலத்தில் இயற்கை உரம் தாயாரிக்கக் கூடிய இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இவரின் படைப்பு, பள்ளி அளவில் நடந்த 'ஐடியா' கண்காட்சியில் தேர்வானது. பின்னர், ஆன்லைன் மூலம் நடந்த மாநில அளவிலான போட்டியில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளில் இருந்து 6 படைப்புகள் தேசிய அறிவியல் கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் மாணவி வனஜாவின் படைப்பும் தேர்வானது.


தொடர்ந்து, டெல்லியில், கடந்த செப்.13-ம் தேதி முதல் செப்.16-ம் தேதி வரை நடைபெற்ற, தேசிய அளவிலான 9-வது இன்ஸ்பயர் அறிவியல் கண்காட்சியில் மாணவிவனஜாவின் படைப்பும் இடம் பெற்றது. இக்கண்காட்சியில் நாடு முழுவதிலும் இருந்து 620 படைப்புகள் இடம்பெற்றன. இதில் மாணவி வனஜாவின் இயற்கை உரம் தயாரிக்கும் இயந்திரம் பார்வையாளர்களையும், நடுவர்க ளையும் வெகுவாக கவர்ந்தது.


இதுகுறித்து மாணவி வனஜா கூறுகையில், " நாம் தெருவில் வீசும் குப்பைகளால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை விளக்கி கூறி, 'வீட்டுக்கு வீடு உரத்தொட்டி' என்ற தலைப்பில் செயல்திட்டம் ஒன்றை உருவாக்க அறிவியல் ஆசிரியை அனுசுயா வழிகாட்டினார்.


அவரது உதவியுடன், குறுகிய காலத்தில் மிக எளிமையாக, உரம் தயாரிக்க தேவையான அனைத்து வசதிகளும் கூடிய ஒரு இயந்திரத்தை வடிவமைக்க திட்டமிட்டேன்.


அதன்படி, கரிமக் கழிவுகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்ட மோட்டாருடன் கூடிய கூர்மையான கத்திகள், பெரிய துண்டுகள் உரத்தொட்டியில் விழாமல் தடுக்க ஒரு வலை, கழிவுகளை தினமும் கிளரி விட முள் கம்பிகள், சரியான ஈரப்பதத்தை தக்க வைக்க தண்ணீர் குழாய்கள், போதுமான காற்றோட்டத்துக்காக தொட்டி முழுவதும் சிறு துளைகள் போன்ற அம்சங்களுடன் இந்த இயந்திரத்தை வடிவமைத்தேன்.


இயந்திரத்துக்கு மின் இணைப்பு கொடுத்து, சுவிட்ச்சு ஆன் செய்தால், சில நிமிடங்களிலேயே கரிமக் கழிவுகளை சிறு சிறு துண்டுகளாக்கி உரத்தொட்டிக்கு அனுப்பி விடும். பின்னர், 10 முதல் 15 நாட்களில் கருப்பு நிறுத்தில் மண் வாசனையுடன் கூடிய ஊட்டசத்துக்கள் மிகுந்த தரமான இயற்கை உரம் தயாராகி விடும்.


இதனை வீட்டு தோட்டம் மற்றும் மாடி தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இயந்திரத்தை கண்ட றிய உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக் கிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் என்னுடைய சிறு பங்களிப்பாக இந்த இயந்திரத்தை கருதுகிறேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க இது எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.


தொடர்ந்து அனைவருக்கும் பயன்படும் வகையிலான எளிய இயந்திரங்களை கண்டறிய வேன் என்று தெரிவித்தார்.

[07/11, 1:34 pm] +91 99407 62319: *பிறந்த குழந்தையின் தலை சரியான வடிவம் பெற*


பெரியவர்கள் குளிப்பாட்டும்போது குழந்தையின் தலை, கை கால்கள், மூக்கு போன்ற பகுதிகளை மென்மையாக அழுத்தியும், பிடித்தும், நீவியும் விடுவார்கள். இதனால் அந்த உறுப்புகள் சரியான வடிவம் பெறும்.

சில தலைமுறைகள் முன்புவரை கர்ப்பிணி பெண்களுக்கு வீட்டிலேயே சுகப்பிரசவம் நடந்தது. வீட்டில் இருந்த பெரியவர்களே புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, மருந்து ஊட்டுவது என அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் சிறப்பாகச் செய்தார்கள். சிலர் இதற்கெனத் தாதிகளை (குழந்தை பராமரிப்பாளர்) நியமித்துப் பராமரித்தார்கள்.


கருப்பையில் வளரும் குழந்தையின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் மென்மையாக இருக்கும். பிரசவத்தின் போது பிறப்புப் பாதை வழியாக சிரமப்பட்டு வெளியே வருவதால் குழந்தையின் தலைப்பகுதி நீண்டு இருக்கும். பெரியவர்கள் குளிப்பாட்டும்போது குழந்தையின் தலை, கை கால்கள், மூக்கு போன்ற பகுதிகளை மென்மையாக அழுத்தியும், பிடித்தும், நீவியும் விடுவார்கள். இதனால் அந்த உறுப்புகள் சரியான வடிவம் பெறும்.


குழந்தையைப் பாயில் படுக்க வைத்து தூங்கச் செய்வது மற்றும் விளையாடச் செய்வதன் மூலம் அதன் நீளமான தலைப்பகுதி உருண்டையான வடிவம் பெறும்.


குழந்தையை அதன் தாய் உபயோகப்படுத்திய சேலையைக் கொண்டு தூளி கட்டி அதில் படுக்க வைப்பார்கள். இது குழந்தைக்குத் தாயின் அரவணைப்பு உணர்வை கொடுப்பதோடு மட்டுமில்லாமல் தலைப்பகுதி இயல்பாக உருண்டை வடிவம் பெறுவதற்கும் உதவும்.


குழந்தையை ஒரே நிலையில் படுக்க வைக்காமல், வெவ்வேறு நிலைகளில் மாற்றிப் படுக்க வைக்கலாம். தலைப்பகுதிக்குத் துணிகளை அடுக்கி தலையணை போல அமைப்பதைத் தவிர்க்கவும்.


குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்து மருத்துவரின் ஆலோசனையுடன், குளிப்பாட்டுவதற்கு முன்பு தேங்காய் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவி மென்மையாக மசாஜ் செய்யலாம்.


குழந்தை நடை பழகும் வயதில் கட்டை வண்டியில் கைப்பிடித்து நடக்கும் போது, கால் தசைகளுக்கு வலிமை கிடைக்கும்.


பாயில் படுக்க மற்றும் விளையாட வைப்பது, தூளியில் தூங்க வைப்பது போன்ற முன்னோர்களின் பழக்கங்களைக் கடைப்பிடித்தால், குழந்தையின் தலைப் பகுதியை சரியான வடிவத்திற்கு கொண்டு வர முடியும்.


அதேநேரம், இயல்பிலேயே நீண்டு இருக்கும் தலைப்பகுதியை உருண்டையாக மாற்றுவதற்காக தவறான முறைகளைப் பின்பற்றக் கூடாது.


குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் பலன்கள்

குழந்தைகளுக்கு இயற்கையான எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்வதால் அவர்களின் சரும ஆரோக்கியம் மேம்படும். தசை மற்றும் எலும்புகள் வலுப்பெறும். குழந்தைக்கும் அன்னைக்குமான பாசம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதற்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும்போது, அதில் இருக்கும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் சருமத்தில் தொற்று மற்றும் வறட்சி ஏற்படாமல் காக்கும்.


சூரியகாந்தி எண்ணெய், நல்லெண்ணெய்யை உபயோகப்படுத்தினால் எலும்புகளின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பாதாம் எண்ணெய் தோல் நோய்கள் உண்டாகாமல் காக்கும். சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி