*180-வது ஆண்டு விழாவையொட்டி மின்னொளியில் ஜொலித்த திருநெல்வேலி சுலோச்சன முதலியார் பாலம்

 *180-வது ஆண்டு விழாவையொட்டி மின்னொளியில் ஜொலித்த திருநெல்வேலி சுலோச்சன முதலியார் பாலம்*



180-வது ஆண்டு விழாவையொட்டி மின்னொளியில் ஜொலித்த சுலோச்சன முதலியார் பாலம்

திருநெல்வேலி

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுலோச்சன முதலியார் பாலத்தின் 180-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி சிறப்பு செய்யப்பட்டது. கணபதி சுப்பிரமணியன், வரலாற்று ஆய்வாளர் சண்முகம் வக்கீல் திருமலையப்பன், கவிஞர் முத்துசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.


இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சுலோச்சன முதலியாரின் 6-வது தலைமுறை (எள்ளு பேரன்) பக்தவச்சலம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். சுலோச்சன முதலியார் பாலத்துக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. அப்போது அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.


இதையொட்டி பாலம் முழுவதும் மின் ஒளியால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று இரவு சுலோச்சன முதலியார் பாலம் மின்னொளியில் ஜொலித்தது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி