1962 - இந்திய திரை உலகமே பெருமை கொண்ட வருடம்.


962 - இந்திய திரை உலகமே பெருமை கொண்ட வருடம்.

நடிக்க வந்த 10 வருடங்களுக்குள், இரெண்டு உலக கௌரவங்களை இந்திய திரை உலகிற்கு பெற்றுத்தந்த முதல் நடிகராக விளங்குகிறார் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள். 1960,
ஆசிய ஆஃப்ரோ உலக படவிழாவில் 150 நாடுகளில் இருந்து சுமார் 86 நாடுகளின் திரை கலைஞர்கள் போட்டியிட்ட பட விழாவில் சிறந்த நடிகர் விருது பெற்றார் சிவாஜி.
இதனை தொடர்ந்து 1962 , உலகின் வல்லரசாக திகழும் அமெரிக்கா , அதன் ஜனாதிபதி திரு.ஜான் கென்னடி அவர்கள் சிறப்பு அழைப்பு விடுக்கிறார் நமது நடிகர் திலகத்திற்கு. இந்திய அமெரிக்கா கலாச்சார தூதுவர் என்ற தகுதியின் அடிப்படையில் அமெரிக்காவிற்கு அழைப்பு விடுக்க அதை ஏற்று சிவாஜி அவர்கள் பயணம் செய்கிறார்.
எப்போதும் போல பொறாமை கொண்ட அரசியல் புகுந்த தமிழ் திரை உலகம், அவருக்கு வழியனுப்ப யோசிக்கிறது, தயங்குகிறது. நடிகர் திலகம் அவர்களை பல்லாயிர கணக்கான மக்கள் வாழ்த்துடன் வழி அனுப்பி வைத்தது, பாலிவுட் என்றழைக்கப்படும் மும்பை திரை உலகம்.
இதனை அப்போது உள்ள முன்னணி பத்திரிகைகள் கடுமயாக விமர்சனம் செய்தது. அதன் விளைவாக நடிகர்திலகம் திரும்பி வந்தபோது , அரசியலை சேர்ந்தவர்கள் இதில் தலையிடாமல் , திரு எம்ஜிஆர் அவர்கள் தலைமையில் வரவேற்பு நடந்தது.
இந்த புகைப்படம் இங்கே சென்னை ஏர்போர்ட்டில் அவரை வழி அனுப்ப வந்த மக்கள் கடல். விமான நிலையத்தின் உள்ளே குவிந்த மக்கள் வாழ்த்துடன் , மும்பை சென்று அங்கிருந்து அமெரிக்கா பயணம் ஆனார் நடிகர் திலகம்.
இணையத்தில் படித்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,