உலக நீரழிவு தினம் 2022

 


உலக நீரழிவு தினம் 2022


    இன்று உலக நீரழிவு தினம்.1991ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14 ஆம் தேதி உலக நீரழிவு தினமாக  கொண்டாடப் பட்டு வருகிறது.நீரழிவு நோயை கட்டுபாட்டில் வைக்க உதவும் இன்சுலினைக் கண்டுபிடித்த "ஃபிரடெரிக் பேண்டிங்" என்பவரின் பிறந்த நாளை உலக நீரழிவு தினமாக உலக சுகாதார நிறுவனம்(WHO) அங்கீகரித்து ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடி வருகிறது.


     சர்க்கரை நோய் உள்ளவர்கள் நோயை கட்டுபாட்டில் வைப்பதும்,அதனால் உண்டாகும்  உடல் நோய்களைத் வராமல் தடுப்பதும், சர்க்கரை நோய் இல்லாதவர்கள் அந்நோய் வராமல் தடுப்பதும் மிக மிக அவசியம்.


அதற்கு நாம் முதலில் சத்துள்ள சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிக நார்ச்சத்து நிறைந்த இயற்கை உணவுகள்,கீரைகள்,பழங்கள்,கொட்டைப் பருப்புகள்,பச்சை,மஞ்சள், சிவப்பு நிற காய்கறிகள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந் எள்,ஆளிவிதை,வால்நட்ஸ், பாதாம்,தேங்காய்,நிலக்கடலை போன்ற உணவு வகைகளையும்,வெந்தயம்,சீரகம்,பூண்டு,வெங்காயம் போன்ற உணவுகளையும்,முளைவிட்ட தனியன்கள் மற்றும் பயறு வகைகள், உண்வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    அந்தந்த பருவ காலங்களில்  கிடைக்கும் பழங்கள் மறறும் காய்கறிகள் ஆகியவற்றை உண்ண வேண்டும்.விலைகுறைந்த நாட்டுக் காய் களான பீர்க்கு, சுரை,புடலை,கத்திரி,அவரை,கொத்தவரங்காய்,பூசணி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாவுச்சத்து நிறந்துள்ள உணவுவகைகளை குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பால் மறறும் பால் பொருட்கள் உண்பது, வெயிலில் உலாவுதல் போன்ற வற்றால் வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைக்கும். இதனால் வைட்டமின் D குறைபாட்டினால் உண்டாகும் சர்க்கரைநோய் ஏற்படாமல் தடுக்கப் படும்.


பசி எடுத்தபின் உண்பது,உணவை நன்றாக மென்று உமிழ் நீருடன் கலந்து சுவைத்து சாப்பிடுவது,உண்ட உணவிற்கேற்ற உடல் உழைப்பு 

தினமும் 30 நிமிடங்கள் வெய்லில் உலவுதல் போன்றவை சர்கரைவியாதி வராமல் தடுக்க உதவும்.

வாழ்க வளமுடன்

Dr. ரேவதி பெருமாள்சாமிComments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,