சாலைகள், வீடுகளை டன் கணக்கில் மூடிய உறைபனி: 6 அடி பனி குவியலில் மூழ்கியது நியூயார்க்

சாலைகள், வீடுகளை டன் கணக்கில் மூடிய உறைபனி: 6 அடி பனி குவியலில் மூழ்கியது நியூயார்க் நகரம்..திக்குமுக்காடும் மக்கள்..!!*

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தை தாக்கிய பனிப்புயல் எதிரொலியாக அந்நகரமே பணிக்குவியலில் மூழ்கி இருக்கிறது. நியூயார்க்கை கடந்த 19ம் தேதி பனிப்புயல் ஒன்று தாக்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு தீவிரமடைந்து வருகிறது. இங்குள்ள ஹேரி மாவட்டத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 180 சென்டி மீட்டர் பனி கொட்டியுள்ளது. நியூயார்க்கின் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், வீடுகளை பல அடிக்கு பனி வியாபித்து இருக்கிறது. ஹம்பர்க் நகரத்தில் 6 அடிக்கு மேல் பனி கொட்டி கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

உறையவைக்கும் கடும் குளிர் எதிரொலியாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியவில்லை. புஃபெல்லா நகர் முழுவதையும் பனிப்போர்வை மூடி இருக்கும் டிரோன் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. பனிப்பொழிவு இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளதால் நியூயார்க் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் டன் கணக்கில் கொட்டி கிடக்கும் பனி குவியலை அகற்றும் பணியை நியூயார்க் மாகாண நிர்வாகம் முடுக்கிவிட்டிருக்கிறது.
..*

*

*

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்