நிகழும் முழு சந்திர கிரகணம்..யாருக்கெல்லாம் பாதிப்பு.. தோஷ பரிகாரம் என்ன?
நிகழும் முழு சந்திர கிரகணம்..யாருக்கெல்லாம் பாதிப்பு.. தோஷ பரிகாரம் என்ன?
இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணம் வரும் 8ஆம் தேதி நிகழப்போகிறது. சுபகிருது வருடம் ஐப்பசி மாதம் 22ஆம் தேதி செவ்வாய்கிழமை பகல் 2.38 மணி முதல் மாலை 06.19 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. மேஷ ராசியில் ராகு கிரஹஸ்த சந்திரகிரகணமாக நிகழ்கிறது. முழு சந்திர கிரகணமாக இருந்தாலும் மாலையில் மட்டுமே பகுதி நேர சந்திர கிரகணமாக பார்க்கலாம்.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். அப்போது, பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.
சந்திர கிரகணம் பவுர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் நிகழும் சந்திர கிரகணமும் பகல் நேரத்தில் நிகழும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும். கடந்த வாரம் நிகழ்ந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிந்தது. வரும் 8 ஆம் தேதி நிகழ உள்ள சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருந்தாலும் மாலையில் சந்திரன் உதயமாகும் நேரத்தில் பகுதி நேர சந்திர கிரகணமாக மட்டுமே தெரியும்.
“ரத்த” நிறத்தில் நிலா.. சூரியனுக்கு பின் வானில் நிகழும் “மேஜிக்” - நவம்பரில் முழு சந்திர கிரகணம்
ரத்த சிவப்பு நிலா
முழு சந்திர கிரகணம் என்பது பூமியுடைய நிழலின் இருண்ட பகுதிக்குள் முழு சந்திரனும் வரும் நிகழ்வு. அம்ப்ரா என்று அழைக்கப்படும் இந்த சந்திர கிரணத்தின் விளைவாக சந்திரன் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
உலக நாடுகள்
இந்த முழு சந்திர கிரகணத்தை ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலும், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, பசிபில் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், இந்திய பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல் பகுதிகளிலும் காண முடியும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
முழு சந்திர கிரகணம் நேரம்
உலகின் பல பகுதிகளில் இந்திய நேரப்படி சந்திர கிரகணம் பிற்பகல் 02.38 மணிக்கு தொடங்க உள்ளது. முழு கிரகணம் 03.45 மணிக்கு ஆரம்பமாகிறது. கிரகண மத்திமம் மாலை 04.28 மணிக்கு நிகழ்கிறது. முழு கிரகணம் மாலை 05 மணி 11 நிமிடத்திற்கு முடிகிறது. கிரகணம் மாலை 06 மணி 19 நிமிடத்திற்கு முடிகிறது.
சந்திர கிரகணம் எத்தனை மணிக்கு தெரியும்
முழு சந்திரகிரகணமாக இருந்தாலும் பகல் நேரத்தில் கிரகணம் நிகழ்வதால் இந்தியாவில் தெரியாது. மாலையில் சந்திரன் உதயமாகி கிரகணம் முடியும் வரை பார்க்கலாம். சென்னையில் மாலை 05 மணி 38 நிமிடத்தில் பகுதி சந்திர கிரகணத்தை பார்க்கலாம், சேலம் நகரில் மாலை 05 மணி 49 நிமிடத்திலும் கோவையில் மாலை 05 மணி 54 நிமிடத்திலும் மும்பையில் மாலை 06 மணி 1 நிமிடத்திற்கும் பகுதி சந்திர கிரகணம் தெரியும்.
கிரகண தோஷமுள்ள நட்சத்திரங்கள்
சந்திர கிரகணம் சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு தோஷத்தை தரும். அவர்கள் அனைவரும் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அசுவினி, பரணி, கிருத்திகை, பூரம்,பூராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கிரகண தோஷதாகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகார தோஷம் செய்து கொள்வது அவசியம். சந்திர கிரகணம் முடிந்த பின்னர் குளித்து விட்டு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு விட்டு வந்து சாப்பிடலாம்.
கிரகண நேரத்தில் சாப்பிட வேண்டாம்
கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. நகம் வெட்டவோ முடி வெட்டவோ கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது. கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைப்பது மரபாகும். கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் நோயாளிகள் கிரகண நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்
அதேபோல், கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும் என்கிறது சாஸ்திரம். கிரக தோஷங்களையெல்லாம் நீக்கிவிடும் இதனை கிரகணத் தர்ப்பணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. சந்திரகிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது மிகவும் பலம் தரும். நூறு மடங்கு புண்ணியங்களையும் பலத்தையும் தரும் ஹோமமானது இந்த வேளையில் செய்யப்படும் போது ஆயிரம் மடங்கு புண்ணியமும் பலமும் கிடைக்கும். கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்து கொண்டிருக்கலாம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்வது, கேட்பது நன்மை தரும்
:
Comments