Black Friday

 

Black Friday

 


Black Friday  Sale

: பிளாக் ஃப்ரைடே சேலில் மிகக் குறைந்த விலையில் பொருட்கள்

வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்
வாசலில் கோலமிட்டேன்
வள்ளி கணவன் பேரை சொல்லி கூந்தலில் பூ முடித்தேன்
.. கூந்தலில் பூ முடித்தேன்

நல்ல பாட்டு .கேட்டுக்கொண்டே இருக்கலாம்

நம்ம நாட்ல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசேடம் தான்

ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் பற்றி உங்களுக்கு  தெரியும்

அப்புறம் நல்ல வெள்ளிகிழமை  Good Friday

புனித வெள்ளி என்பது உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படக் கூடிய ஒரு முக்கியமான நாளாகும். இந்த நாளை பெரிய வெள்ளி என்றும் அழைக்கின்றனர். இந்த புனித வெள்ளி கிறிஸ்து பட்ட பாடுகளையும், அவரின் சிலுவையில் அவர் மரித்தததையும் நினைவுகூறும்  விதமாக கொண்டாடப்படுகிறது

இந்த புனித வெள்ளி, கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்திய வெள்ளிக் கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இந்த புனித வெள்ளியன்று கிறிஸ்தவர்கள் தங்களது தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்துவதுண்டு.

 


Friday 13

இந்தியாவில் அஷ்டமி, நவமி, தேய்பிறை என்றெல்லாம் நாள், கிழமை பார்த்து சுப காரியங்களைத் தொடங்குவதையும் தள்ளிப் போடுவதையும் பார்த்திருப்பீர்கள். பூனை குறுக்கே போனது, கழுதை நடுவே சென்றது என்று சிலர் சகுனம் பார்ப்பதையும் கடந்து வந்திருப்பீர்கள்

ஆனால் இத்தகைய மூட நம்பிக்கைகள் எல்லாம் மேற்கத்திய நாடுகளில் இல்லை' என்று சிலர் பெருமை பாடுவதையும் பார்த்திருப்போம். ஆனால் அங்கும் குறிப்பிட்ட சில நம்பிக்கைகள் தீவிரமாகப் பின்பற்றப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை.

அதென்ன 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை?

மேற்கத்திய நாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் வெள்ளிக்கிழமையன்று வரும் 13ஆம் தேதி ராசியில்லாத தினமாகக் கருதப்படுகிறது. இந்த தினத்தில் எந்த ஒரு புதிய காரியத்தையும் வெளிநாட்டினர் தொடங்குவதில்லை. இந்த தினம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாமா?

கிரிகோரியன் காலண்டரில் ஒரு மாதத்தின் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வந்தால், அந்த நாள் ராசியற்ற நாளாகக் கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் குறைந்தபட்சம் ஒருமுறையும் அதிகபட்சமாக 3 முறையும் 13-ம் தேதியும் வெள்ளிக்கிழமையும் ஒன்றாக வருகின்றன

என்ன காரணம்?

யேசு கிறிஸ்துவின் கடைசி விருந்தில், யேசு கிறிஸ்து மற்றும் அவரின் சீடர்கள் என மொத்தம் 13 பேர் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை யேசு சிலுவையில் அறையப்பட்டார்.( crucifixion)இதைத் தொடர்ந்து 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை துக்ககரமான, ராசியில்லாத நாளாகக் கருதப்படுகிறது.  

 நாம பார்க்கபோவது இது வல்ல

கருப்பு வெள்ளிக்கிழமை

 கருப்பு வெள்ளிக்கிழமை (ப்ளாக் பிரைடே) மற்றும் தேங்க்ஸ் கிவிங் டே பற்றி தெரியுமா?

 Black Friday and Thanksgiving Day in Tamil. வாம்ப்போனங் (Wampanoag) பில்கிரிம் (Pilgrims) இனத்தின் மோதல்

ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை ப்ளாக் ஃப்ரைடே கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலக அளவில் அதிகமான பொருட்கள் விற்பனையாகும்.

 

நம்ம ஊர் ஆடித் தள்ளுபடி ஆப்பர்களை விட பன்னாட்டு நிறுவனங்கள், ப்ளாக் ப்ரைடே அன்று ஆப்பர்களை அள்ளிவீசும்.

கருப்பு என்பது துக்கத்தை குறிக்கும் நிறம். சந்தோசமான வெள்ளிக்கிழமையை ஏன் கருப்பு வெள்ளிக்கிழமை என பெயரிட்டுள்ளனர்?

ப்ளாக் ப்ரைடே பற்றி அறிந்துகொள்ளும் முன், Black Friday இது ஏன் கொண்டாப்படுகிறது? தேங்க்ஸ் கிவிங் டே (Thanksgiving Day) என்றால் என்ன? என்று பார்ப்போம்.

தேங்க்ஸ் கிவிங் டே (Thanksgiving Day Tamil)

நவம்பர் நான்காவது வியாழன்கிழமைதேங்க்ஸ் கிவிங் டேகொண்டாடப்படுகிறது.

 இதற்கு அடுத்த நாள் ப்ளாக் ப்ரைடே கொண்டாடப்படுகிறது

இரண்டாயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்புவாம்ப்போனங் (Wampanoag) என்ற இனம் வடஅமெரிக்காவில் வசித்து வந்தது. இவர்கள் அமெரிக்காவில் குடியேறிய, இந்தியப் பழங்குடியினர்

 

வாம்போனங் இனத்தில் முச்சகோதரிகள் (Three sister) என்று அழைக்கப்பட்ட மூன்று பெண்கள் இருந்தனர். இவர்கள் தான் அமெரிக்காவிற்கு விவசாயத்தை அறிமுகம் செய்தது. இந்த நாகரிகம் கிமு 800-களில் கனடாவில் முதலில் துவங்கியது.

அந்த காலகட்டத்தில் வாம்ப்போனங் இன மக்கள் அம்மை நோயால், அளவுக்கு அதிகமாக உயிரிழந்து கொண்டிருந்தனர். அச்சமயத்தில் பில்கிரிம் (Pilgrims) என்ற இனத்தவர் அங்கு நுழைகின்றனர்.

பில்கிரிம் இனத்தின் வேலையே, போகும் வழியில் கிடைத்ததை சுருட்டிக்கொள்வது. இவர்கள் ஐரோப்பியர்கள். எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள். வாம்ப்போனங் இனத்தவரின் உடமைகளையும், பொருட்களையும் கொள்ளையடித்து கொள்கின்றனர்

ஏற்கனவே, நோயால் பாதிக்கப்பட்ட வாம்ப்போனங் இனத்தினர் தற்பொழுது, உணவு இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வாம்ப்போனங் இனம் தொடர்ந்து பில்கிரிம் இனத்தால் பாதிப்புக்குள்ளானது.

இதை முடிவுக்கு கொண்டுவர, பில்கிரிம் இனத்தவருடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டனர் வாம்ப்போனங் இனத்தினர்.

வருடா வருடம் முதல் அறுவடை நாளில், ஒரு பங்கை பில்கிரிம் இனத்தவருக்கு விருந்தாக படைத்தனர். பின்னாளில் இதுவே தேங்க்ஸ் கிவிங் டேவாக மாறியது
.

வான்கோழியின் இறைச்சி

1621-ம் ஆண்டு அமெரிக்காவில், முதல் தேங்க்ஸ் கிவிங் டே விருந்து கொண்டாடப்பட்டது. அதில் வான்கோழியின் இறைச்சி முக்கிய இடம்பிடிக்கும்.

எனவே வான்கோழிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இதற்கு 1789-ல் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன், தேங்க்ஸ் கிவிங் டே நாளை அதிகாரப்பூர்வ கொண்டாட்டமாக நடைமுறைக்கு கொண்டுவந்தார்.

பின்னர் வந்த ஜனாதிபதிகளில் ஆபிரகாம் லிங்கன், தேங்க்ஸ் கிவிங் டே நாளை அமெரிக்காவின் அரசு விடுமுறை தினமாக அறிவித்தார்.
.

அமெரிக்காவில், நவம்பர் நான்காவது வியாழக்கிழமை தேங்க்ஸ் கிவிங் டே கடைபிடிக்கப்படுகின்றது. கனடாவில் அக்டோபர் இரண்டாம் திங்கள்கிழமை கடைபிடிக்கப்படுகின்றது.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலங்களில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இணையாக தேங்க்ஸ் கிவிங் டே கொண்டாடப்பட்டது.

 

மேலும், மக்கள் நிறைய பொருட்களை வாங்க ஊக்குவிக்கும் விதமாக, வணிகர்கள் சலுகைகள் வழங்க ஆரம்பித்தனர்உலகிலேயே அதிகமாக பொருட்கள் விற்பனையாகும் நாள் என ப்ளாக் ப்ரைடே  (black friday) என வரலாற்றில் இடம்பிடித்தது.

  

ப்ளாக் ப்ரைடே (Black Friday Tamil)

தேங்க்ஸ் கிவிங் டேவிற்கு மறுநாள், நவம்பர் நான்காவது வெள்ளிக்கிழமையில் அமெரிக்க மக்கள் புதிய பொருட்கள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டனர்.

மேலும்மக்கள் நிறைய பொருட்களை வாங்க ஊக்குவிக்கும் விதமாகவணிகர்கள் சலுகைகள் வழங்க ஆரம்பித்தனர்உலகிலேயே அதிகமாக பொருட்கள் விற்பனையாகும் நாள் என ப்ளாக் ப்ரைடே  (black friday) என வரலாற்றில் இடம்பிடித்தது.

நவம்பர் 1 முதல் வெள்ளிக்கிழமை வந்தால் அந்த மாதத்தில் 5வது வெள்ளிக்கிழமை ப்ளாக் ப்ரைடே  (black friday)  கொண்டாப்படுகிறதுகடை வீதிகள் மற்றும் நகர்புறம் இந்த நாளில், கூட்ட நெரிசலுடன் காணப்படும். எனவே, சாலைவிபத்து மற்றும் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தனர். இதை நினைவு கூறும் விதமாக ப்ளாக் ப்ரைடே எனப் பெயரிடப்பட்டது.

 : ஆன்லைன் ஷாப்பிங் ட்ரெண்ட் அதிகமாகியிருக்கும் இந்த காலத்தில், அனைத்து பொருட்களுக்கும் பெரும் தள்ளுபடியும் கிடைக்கிறது. பாரம்பரியமாக அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் சீசனின் தொடக்கத்தைக் குறிக்கும் பிளாக் ஃப்ரைடே சேல் (Black Friday Sale) இந்தியாவிலும் அமோகமாக நடைபெறுகிறது.


பல ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் பல்வேறு தயாரிப்புகளை வழங்குகின்றன. இந்தியாவில் பிளாக் ப்ரைடே நாளான இன்று, அமேசான், பிளிப்கார்ட், விஜய் சேல்ஸ், குரோமா மற்றும் பிற நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை வழங்குகின்றன.  

·                   ஆன்லைன் ஷாப்பிங் மேளா பிளாக் ஃப்ரைடே

·                   அனைத்து பொருட்களுக்கும் பெரும் தள்ளுபடி

·                   பிளாக் ஃப்ரைடே சேல் விற்பனை இந்தியாவில்

 

பல இந்திய -காமர்ஸ் தளங்கள் 2022 கருப்பு வெள்ளி விற்பனையில் பெரும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகின்றன. இதில்Amazon India, Myntra, Croma, Tata Cliq .jiomart என பல தளங்களும் சூப்பர் ஆஃபர்களை வழங்குகின்றன.

·                   இன்றைய செய்தித்தாள்களை பார்த்தால் பிளாக் ஃப்ரைடே

அனைத்து பொருட்களுக்கும் பெரும் தள்ளுபடிஎன பல நிறுவனங்கள்

விளம்பரங்களை வெளியிட்டுள்ளன

நீங்களும்  

இன்றைய கருப்பு வெள்ளிக்கிழமையை  நல்ல வெள்ளிக்கிழமையாக பயன்படுத்திக்கொள்ளுங்க

வெள்ளிப்பணத்தை சிக்கனமா செலவு பண்ணலாமே

கொசுறு  செய்தி

வேலை நிறுத்தில் ஈடுபடும் அமேசான் ஊழியர்கள் - Black Friday விற்பனை பாதிக்கும் என அச்சம்

அமேசான் நிறுவனத்தின் தற்போது நிலவும் கடுமையான சூழலை முன்னிட்டு black Friday வான இன்று ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளது . அதாவது அமெரிக்கா, லண்டன், இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40 நாடுகளில் பணிபுரியும் அமேசான் நிறுவன ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருப்பு வெள்ளிக்கிழமை விற்பனை என்பது ஆன்லைன் வர்த்தகத்தில் மிகவும் முக்கியமான நாளாகும். இன்று ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இந்த போராட்டத்தில் பல தொழிற்சங்கங்களும் பங்கேற்று உள்ளன.

அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள ஊழியர்கள், மேக் அமேசான் பே என்று இந்த போராட்டத்துக்கு பெயர் வைத்துள்ளனர். தங்களின் தினசரி செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெரும் நெருக்கடியை சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறைந்தபட்ச ஊதியம் தொகையாக ரூ. 25,000 வழங்க வேண்டும், ஊழியர்களின் வேலை நேரத்தை குறிப்பிட்ட கால அளவுகளில் நிர்ணயிப்பது, ஊழியர்களுடன் போடப்படும் ஒப்பந்தங்களை நிலையான கால அளவுகளில் உருவாக்க வேண்டும் என பல கோரிக்கைகளையும் வைத்துள்ளனர்.

சமீபத்தில் அமேசான் வெளியிட்ட அறிக்கையில், பெரும் அளவு ஊழியர்களை வேலையிலிருந்து நீக்க உள்ளதாக தெரிவித்திருந்தது. நிறுவனத்தின் இந்த முடிவு ஊழியர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

- காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் எப்போதுமே ஒருவிதமான பதட்டமான சூழ்நிலையில் இருப்பதாகவும், இது நிறுவனத்தின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லை என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணம் விதமாக அமேசான் நிறுவனம் தங்களின் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு எடுக்க வேண்டுமென்றும் தொழிலாளர் அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

thanks giving day

videos and  photos by Thiru perumasamy


thanks 
கட்டுரை


உமாதமிழ்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,