குழந்தைகள் தினமின்று!

 


குழந்தைகள் தினமின்று!

குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட நாள். ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளான நவம்பர் 14-ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
நேரு குழந்தைகளை மிகவும் நேசித்தவர். குழந்தைகள் மத்தியில் பிரபலமாக இருந்ததால், ‘சாச்சா நேரு’ (Chacha Nehru) என்று போற்றப்பட்டார். இந்த ஆண்டு குழந்தைகள் தினம் இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளின் உரிமை, அவர்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
நேரு குழந்தைகளை நாட்டின் சொத்தாக கருதினார். குழந்தைகளுக்கு தரமான கல்வி வேண்டும் என நினைத்தவர். இதன் காரணமாகவே அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (IIM) மற்றும் தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (NIT) உருவாக்கப்பட்டன.
இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியாவின் எதிர்காலம். நாம் அவர்களை வளர்க்கும் விதம் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று நேரு கூறினார். 1956-ம் ஆண்டு முதல் நவம்பர் 20-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் படி ‘உலகளாவிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
பிறகு 1964-ம் ஆண்டு பண்டிட் நேருவின் மறைவுக்குப் பிறகு, அவரது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் கொண்டாட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டது. அப்போதிருந்து, நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,