*வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் உலக கோப்பை கால்பந்து தொடர் கோலாகலமாக தொடங்கியது*

 *வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் உலக கோப்பை கால்பந்து தொடர் கோலாகலமாக தொடங்கியது*



தோஹா: ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடர், கத்தார் நாட்டின் அல் கோர் நகரில் நேற்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றன. இத்தொடருக்கான பிரமாண்ட தொடக்க விழா, அல் பேட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்றது.


தென் கொரியாவை சேர்ந்த பிடிஎஸ் இசைக்குழுவின் நட்சத்திரப் பாடகர் ஜங் குக் ‘ட்ரீமர்ஸ்’ என்ற பாடலை உற்சாகமாகப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். அவருடன் இணைந்து கத்தார் பாடகர் பகத் அல் குபைசியும் இசை மழை பொழிந்தார். கத்தார் நாட்டின் பாரம்பரியப் பெருமைகளை விளக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள், லேசர் விளக்குகளின் ஜாலம், வாணவேடிக்கை என அசத்தலான தொடக்கவிழா பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து நடந்த ஏ பிரிவு முதல் லீக் ஆட்டத்தில் கத்தார் - ஈக்வடார் அணிகள் மோதின....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,