பால் மனம் மாறாத நட்பில் மக்கள் திலகமும் நடிகர் திலகமும்

 


பால் மனம் மாறாத நட்பில் மக்கள் திலகமும் நடிகர் திலகமும். நாங்கள் இருவரும் தாய் பாசத்தில்

அதிக பற்று கொண்டவர்கள். தாய்யை தெய்வமாக மதிப்பவர்கள், தாய் சொல்லை தட்டதாவர்கள்.
"மதுரை ஸ்ரீ பாலகான சபா" சென்னையில் முகாமிட்டுருந்த சமயம் நாங்கள் தங்கி இருந்த வீட்டு அருகில் தான் சகோதரர் எம் ஜி ஆர் வீடு இருந்தது. காலையில் நாடகம் முடிந்த பின்பு மற்ற ஓய்வு நேரங்களில் அவர் வீட்டுக்கு செல்வேன், அவரது அம்மா என்னையும் ஒரு மகனாக நினைத்து பழகியது என்னால் மறக்க முடியாது.
இருமலர்களாக தொடுக்கப்பட்ட எங்கள் நட்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால், கண்ணதாசன் எழுதிய நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளதென்றலே....
கண்ணில் மணி போல மணியில் நிழல் போல கலந்து பிறந்தோமாடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா..
உறவை பிரிக்க முடியாதடா..
என்பதை போன்றது.
காலையில் உடற்பயிற்சி செய்து குளித்து விட்டு எனக்காக காத்து இருப்பார் எம் ஜி ஆர். நான் சென்ற பின் இருவரும் அருகருகே அமர்ந்த பின்பு தான் காலை சிற்றுண்டியை அவரது அம்மா எங்கள் இருவருக்கும் பரிமாறுவார். நான் செல்வதற்கு சிறிது தாமதமாகி அண்ணனுக்கு பசி எடுத்து விட்டால், அம்மா.. எனக்கு பசிக்கிறது, என்று சொல்வார். 'இரு கணேசன் வரட்டும், சேர்ந்து சாப்பிடலாம்'. என்பார் சத்யா அம்மா..
இவ்வாறு இவர்கள் நட்பை பற்றி கதாநாயகனின் கதை (18) குறிப்பிட்டுள்ளார் நடிகர் திலகம் 🙏🏿
இணையத்தில் படித்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,