உலக நீரிழிவு நோய் தினமின்று!

 


உலக நீரிழிவு நோய் தினமின்று!

நீரிழிவு நோய்க்குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும் என்ற நோக்குடன், இது ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான சிகிச்சை, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்புடைய பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
உலகம் முழுவதும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டைப்1 நீரிழிவு நோயைத் தடுக்க முடியாது மற்றும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் இன்சுலின் ஊசி மூலம் இந்த வகை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் டைப் 2 நீரிழிவு நோயைத் தடுக்கலாம், சிகிச்சையின் மூலம் இயல்பான வாழ்க்கையைத் தொடர முடியும்.
நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தும் இன்சுலின் மருந்தினை சார்ல்ஸ் பெஸ்ட் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிக்கர்ட் ஆகியோருடன் இணைந்து 1922 இல் ஃப்ரெட்ரிக் பான்டிங் என்பவர் கண்டுபிடித்தார். இவரது பிறந்த தின நினைவாகவே நவம்பர் 14ஆம் தேதி நீரிழிவு நாளாக நினைவுகூரப்பட்டு வருகிறது. ஐ.நா. சபை, நீலநிறத்திலான வளையத்தை அடையாளச் சின்னமாக வெளியிட்டு இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு நீரிழிவு நோய் விழிப்புணர்வு தினம் பெருமளவில் அனைவரிடத்திலும் சென்று சேர்ந்தது. நீரிழிவு நோயாளிகளின் உடல் மற்றும் மன நலன்கள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நோய்க்குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நோயாளிகளுக்கு உயிர்க்காக்கும் மருந்துகளை உருவாக்குவதற்கான நிதியைத் திரட்டுதல் போன்றவை இந்த நாளின் மையமாக உள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,