டயர் பஞ்சர் ஆகிடுச்சா கவலைய விடுங்க

 

டயர் பஞ்சர் ஆகிடுச்சா கவலைய விடுங்க... கடைய எல்லாம் தேடி அலைய வேணாம்... நீங்களே பஞ்சர் போடலாம்!

நம்மில் பலர் நீண்ட தூர பயணம் அல்லது ஆஃப்ரோடு பயணங்களில் போது கார் அல்லது பைக்கில் நடுவழியில் பஞ்சாரகி நின்ற அனுபவம் இருக்கும். இப்படியாகப் பஞ்சராகி நிற்கும் போது அருகில் உள்ள பஞ்சர் கடையைத் தேடிச் செல்வோம்.


அருகில் கடைகளே இல்லை என்றால் எவ்வளவு தான். இப்படியான நேரங்களில் நாமே பஞ்சர் போட கற்று வைத்திருப்பது மிகவும் அவசியம். முன்னர் டயர்களில் டியூப் டயர்கள் இருந்தன பஞ்சர் போடுவது சிரமம் ஆனால் இன்று பெரும்பாலும் டியூப்லெஸ் டயர்கள் வந்துவிட்டன. இதை எளிமையாகப் பஞ்சர் கடைக்காரர்களின் உதவியே இல்லாமல் செய்ய முடியும். இதற்குத் தேவையான விஷயம் பஞ்சர் போடுவதற்கான 2 டூல்கள், ரப்பர் ஸ்டிரப், ஒரு சோப்பு அல்லது ஷாப்பு பாக்கெட் தான். இது போக தண்ணீர் வைத்துக்கொள்ளச் சிறிய பாத்திரம், ஏர் இன்ஃபிலேட்டர் நீங்கள் பயணத்தைத் துவங்கும் முன்னரே இந்த பொருட்கள் எல்லாம் இருக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது பயணத்தின்போது டயர் பஞ்சராகிவிட்டால் முதலில் பதறாமல் வாகனத்தை ஓரமாக நிறுத்துங்கள் எந்த டயர் பஞ்சராகியுள்ளதோ அதில் பஞ்சர் எங்கே ஆகியுள்ளது என்பதைப் பாருங்கள். பஞ்சரைக் கண்டுபிடித்துவிட்டால் பிரச்சனையில்லை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் ஷாம்பூ சேர்த்து அந்த தண்ணீரை டயரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பஞ்சரான இடத்தை கண்டுபிடிக்கலாம்.

பஞ்சரான இடத்தில் உள்ள ஆணி அல்லது குத்திய பொருளை வெளியே எடுக்க முயற்சி செய்யுங்கள் இதற்காக நீங்கள் பஞ்சருக்கு வைத்திருக்கும் டூலை பயன்படுத்தலாம். அடுத்தாக அந்த பகுதியில் ஓட்டையை நன்றாகப் பெரிதாக்கி பின்னர் ரப்பர் ஸ்டிரப்பை அதற்கான டூலீல் மாற்றி அந்த ஓட்டையில் குத்தி வெளியே எடுங்கள் ரப்பர் ஸ்டிராப் அதில் மாட்டிக்கொள்ளும். பின் பின்னர் வெளியே இருக்கும் பகுதியை வெட்டி எடுத்துவிட்டால் டயர் ரெடி.
ஆனால் டயர் பஞ்சரானதில் காற்று வெளியேறியிருக்கும். அதை அடைக்கத்தான் ஏர் இன்ஃபிளேட்டரை பயன்படுத்த வேண்டும். கார்களில் உள்ள பேட்டரியில் இயங்கும் ஏர் இன்ஃபிளட்டர்கள் அதிகம் மார்கெட்டில் இருக்கிறது. அதை நம்பி வாங்கலாம். ஆனால் பைக்குகளில் பயன்படுத்தும்படியான ஏர் இன்ஃபிளேட்டர்கள் மார்கெட்டில் பெரிய அளவில் இல்லை. ஆனால் ஒரு சில தற்காலிக ஏர் இன்ஃபிளேட்டர்களை பயன்படுத்தலாம். தற்காலிக இன்ஃபிளேட்டரை வைத்துக்கொண்டு சரியான பிரஷரில் காற்றை நிரப்ப முடியாது என்றாலும் தற்காலிகமாக அடுத்த ஏர் பிடிக்கும் கடைக்கு செல்லும் அளவிற்கான காற்று நிச்சயம் இருக்கும். கார்களில் பயன்படுத்தும்படியான ஏர் இன்ஃபிளேட்டரில் பிரஷரையும் செக் செய்து கொள்ளலாம். இந்த முறையின் படி டியூப்லெஸ் டயர்களை நீங்களே பஞ்சர் போட்டுக்கொள்ள முடியும். இதற்காகக் கடையைத் தேடி கஷ்டப்பட வேண்டிய தேவையில்லை டியூப் டயர்களில் நாமே பஞ்சர் போடுவது கடினம். இந்த பதிவு உங்களுக்கு உதவிகரமாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,