*கலம் இடுவோன்*

 *கலம் இடுவோன்*நன்றி குங்குமம் ஆன்மிகம்


கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில், ‘‘கலன் இடுவோன்’’ என்ற தொடர் பல நூறு கல்வெட்டுக்களில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். கலனை சோறு, காய்கறி சமைப்பதற்கும், உணவினை வைத்து நிவேதனம் செய்வதற்கும், அவற்றை அடியவர்களுக்கு வழங்கவும் பயன்படுத்தப்பட்ட மட்பாத்திரங் களைக் குறிப்பதாகும்.கோயில்களில், நீர் நிறைத்து வைக்கும் (சால்கள்), எண்ணெய் சேமித்து வைக்கும் குடங்கள், சோறு சமைக்கும் பானைகள், சட்டிகள், வேள்விச் சாலைகளில் பயன்படுத்தும் குடங்களில், சிறிய குடங்களான கலசங்கள் (மொந்தைகள்), தூப, தீப கால்கள், விளக்கேற்றப் பயன்படும் அகல்கள், மூடியாகப் பயன்படுத்தும் மடக்குகள், மூடிகள், விளக்கைவைத்து மூடும் ஆயிரம் கால் பானைகள் போன்ற பல மட்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டன.


நிவேதனங்களில் சட்டிச்சோறு என்பதும் ஒன்றாகும். வாயகன்ற தட்டும் அல்லாமல், வாயகன்ற குடம் போல் இல்லாமல், செய்யப்பட்ட கலவையே சட்டியாகும். இதில் சோற்றை இட்டு அதை சுற்றி சிறிய பாத்திரங்களில் பருப்பு, குழம்பு, ரசம், தயிர், காய்கறி, அப்பம் போன்றவற்றை வைத்து நிவேதிப்பதே சட்டிச்சோறு எனப்படும்.இந்த சட்டிச்சோறு துறவிகள், மாகேஸ்வரர்கள் போன்றவர்களுக்கு அளிக்கப்பட்டது. சட்டிச்சோற்றை பெறுவது உயர் நிலையை குறிப்பதாகும். இதனால், கோயில்களில் மட்பாண்டங்கள் பெருமளவு உபயோகத்தில் இருந்தன. இவற்றை ஓரிருமுறை பயன் படுத்தவும், ஒருமுறை மட்டுமே பயன்படுத்துவதும் உண்டு.


இதையொட்டி, கலமிடுவோர் பணிக்கு அமர்த்தப்பட்டு தேவைக்கேற்ப மண்பாத்திரங்களை பெற்றனர். இவர்கள் வேட்கோவர் என்றும் அழைக்கப்பட்டனர். கருவறை வழிபாடு, திருவிழா வழிபாடு போன்றவற்றிற்குப் பயன்படுத்தும் குடங்கள், கலசங்கள், மொந்தைகள், சட்டிகள், பானைகள், தட்டுக்கள், தூப - தீபங்கள், உருவங்கள் போன்றவைகளும் மண்ணைக் கொண்டு தயாரிக்கப்பட்டன. எனவே, சுடு மண் கலன்களை உருவாக்கும் கலைஞர்கள் பணி அத்தியாவசியப் பணியாக இருக்கிறது. இவர்களுக்கு மானியம், விழாக்களில் மரியாதை போன்றவை நடைமுறையில் உள்ளன.


தொகுப்பு: அ.வசந்தன்...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,