*இன்று சர்வதேச ஆண்கள் தினம்*
*இன்று சர்வதேச ஆண்கள் தினம்*
இன்று (நவம்பர் 19) சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ந்தேதி சர்வதேச ஆண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தங்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்திற்கு ஆண்கள் செய்யும் பங்களிப்புகளை போற்றும் வகையிலும் ஆண்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையிலும் சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. முதன்முதலில் 1999-ம் ஆண்டு டாக்டர் ஜெரோம் தீலக்சிங் சர்வதேச ஆண்கள் தினத்தை தோற்றுவித்தார்.
டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள மேற்கிந்திய தீவுகள் பல்கலைகழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றிய ஜெரோம் தன்னுடைய தந்தையின் பிறந்த தினத்தை நினைவு கூறும்வகையில் நவம்பர் 19-ஐ ஆண்கள் தினமாகக் கொண்டாட தேர்ந்தெடுத்தார். ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்கள் தினத்தை கொண்டாடுமாறு மக்களை ஊக்குவித்தார்.
தொடக்க காலக்கட்டத்தில் கரீபிய தீவுகளில் ஆதரவைப் பெற்ற ஆண்கள் தினம் அதன்பின்பு, தொடர்ச்சியாக பிறநாடுகளின் ஆதரவுகளையும் பெற்று தற்போது சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷியா, இங்கிலாந்து உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் 45 வயதிற்குட்பட்ட ஆண்களின் மரணத்திற்கு தற்கொலையே முக்கிய காரணம் என உலக சுகாதார அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.
பாலியல் அடையாளம், சமூக மற்றும் கலாச்சார சீரமைப்புகள் ஆகியவை ஆண்களுக்கு மனநலம் மற்றும் உளவியல் ரீதியாக ஏற்படுத்தும் தாக்கங்களே இந்த தற்கொலைக்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஆண்கள் வலிமையானவர்கள், பாதிப்பில்லாதவர்கள் என அவர்களின் வெளித்தோற்றம் கொண்டு சமூகத்தால் அளவிடப்படுகின்றனர். இதனால் உணர்வுப்பூர்வமான அவர்களின் தேவைகள் மதிக்கப்படாமல் மறைக்கப்படுகின்றன. சர்வதேச ஆண்கள் தினம் 6 நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
நேர்மறையான ஆண் முன்மாதிரிகளை உருவாக்குவது.
சமூகம், குடும்பம், திருமணம், குழந்தை பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழலில் ஆண்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுவது.
ஆண்களின் உணர்ச்சி, உடல், சமூகம் மற்றமு ஆன்மீக பாதுகாப்பை கவனித்துக்கொள்வது.
ஆண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துக்காட்டுவது.
பாலின உறவுகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி பாலின சமத்துவத்தை மேம்ம்படுத்துவதில் கவனம் செலுத்துவது.
ஒவ்வொரு இனமும் தங்கள் முழுத் திறனுடன் செழித்து வளரக்கூடிய சிறந்த மற்றும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவது.
ஆண்கள் தினம் பெண்கள் தினத்துக்கு போட்டியாக கொண்டாடப்படுவதற்காக உருவாக்கப்பட்டதில்லை. மாறாக ஆண்களின் மதிப்புகள், குணாதிசயங்களை உணர்த்தும் விதமாகவும் ஆண்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்காகவும் ஆண்களை மனம்திறந்து பேச ஊக்குவிப்பதற்காகவும் ஆண்கள் தினம் உருவாக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது
[19/11, 12:26 pm] +91 99407 62319: *ஐம்புலன்களை அடக்கி இறை உணர்வைக் காட்டும் ஐயப்ப விரதம்*
ஐயப்ப விரதம் ஐம்பது நாட்களுக்குக் குறையாதது. இந்த விரதத்தை விரதத்திற்கு எல்லாம் பெரிய விரதம் என்றே சொல்லலாம்! எல்லா விரதங்களும் மவுனமாக இருக்கவும், பட்டினியிருக்கவும், கண் விழிக்கவும், தெய்வ வழிபாடு செய்யவும் தான் வலியுறுத்தும். ஆனால் ஐம்புலன்களை அடக்கி அதன் வழி இறை உணர்வைக் காட்டும் ஒரே விரதம் சபரிமலை ஐயப்ப விரதம்தான்.
கீதையின் போதனையும் ஞானிகளின் உபதேசமும், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் யாவும் ஆணித் தரமாய் வற்புறுத்துவது ஐம்புலன் அடக்கமே! அதை செயலில் காட்ட செய்வதே ஐயப்ப விரதத்தின் மகிமை!
பிரம்மச்சர்யம்: பிரம்மச் சர்யம் என்றால், ஆண்-பெண் சேர்க்கையைத் தவிர்ப்பது என்பதாகும். ஆனால் ஐயப்ப விரதம் என்ன சொல்கிறது தெரியுமா? மனதாலும் பெண்ணைத் தீண்டாதிருப்பதே பிரம்மச்சர்யம் என்கிறது. அது மட்டுமல்ல இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் அனைவரும் தாங்கள் பார்க்கும் பெண்களை அம்பிகையின் அவதார மாகக் கருதுவதே இவ் விரதத்தின் உயர்ந்த தத்துவம்.
நீராடல் : அனுதினமும் காலை, மாலை இருவேளையும் தவறாது குளிர்ந்த நீரில் நீராடி வழிபட வேண்டும். மழையோ பனியோ குளிரோ எதுவாக இருந்தாலும் தொடர்ந்து 45 நாள் முதல் 50 நாள் வரை நீராடி விரதத்தின் முடிவாக சபரிமலை யாத்திரையில் நேரும் மழை, பனி, குளிர், இயற்கை சீதோஷ்ணத்திற்கு உடல் நிலை பாதிக்கப்படாமல் இருக்க நம்மை பழக்கப்படுத்தி தயார்படுத்துவது இவ் விரதத்தின் சாதனை என்றே சொல்லலாம்.
வழிபாடு: அவரவர் தாய் மொழியில் ஐயப்பன் நாமங்களை சரணம் சொல்லுதல், ஐயப்பனை கிடைக்கும் நேரத்திற்கேற்ப கூடுதலாகவோ குறைத்தோ சொல்லி வழிபட்டு பானகம் கரைத்த நிவேதனம் செய்து கற்பூரம் ஏற்றி தீப ஆராதனை செய்து வழிபட்டால் போதுமானது.
காவி உடை: ஐயப்ப விரதம் மேற்கொள்ளும் பொது காவி உடை அணிய வேண்டும். ஏன் தெரியுமா? மற்ற மனிதர்களிடமிருந்து பிரித்துக் காட்டவும், ஐயப்பனுக்குரிய மரியாதையை கிடைக்கச் செய்யவும் தன்னைத்தானே உணர்ந்து சதா சர்வகாலமும் ஐயப்பனை நினைவுப்படுத்திக் கொண்டிருக்கவும், கொலை, களவு, பொய், வன்முறை பொன்ற எந்த தீமையும் எண்ணத்தில் கூட வராமலிருக்கும் பொருட்டு அறிவுறுத்தும் வகையில் காவி ஆடை விரதம் கொள்வோருக்கு கவசமாக இருந்து உயர்த்துகிறது. மாயையைக் குறிப்பது கறுப்பு. ஐயப்பா! நான் மாயையில் உழன்று தவிக்கிறேன். என்னை மாயையில் இருந்து விடுபடச் செய்! என்று வேண் டிக் கொள்ள ஏதுவாக கறுப்பு நிற ஆடைகள் அமைகிறது.
உணவு பழக்கம் : விரத காலத்தில் நண்பகல் உணவும், இரவு பலகாரமும் உணவும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம். தினசரி வாழ்க்கையில் பயன்படுத்திய பாய், தலையணை, போர்வை எதுவுமே விரத காலத்திற்கு உகந்தது அல்ல. இவை இன்றி படுத்துறங்க பழகிக் கொள்ள வேண்டும். ஏனெனில் காட்டுப் பிரதேச பயணத்தில் இவை பெரிதும் உதவும். இந்த நியதி மூலம் எப்படியும் வாழ முடியும் என்ற நிலைக்கு மாற்ற ஐயப்ப விரதம் பக்தர்களை முழுமையாக தயார்படுத்துகிறது.
Comments