கடம்ப மரம் :




 கடம்ப மரம் :

( Anthocephalus indicus = Anthocephalus Cadamba)
விஞ்ஞானப் பெயர்- Anthocephalus cadamba
Syn : Neolamarchia cadamba
குடும்பம் - Rubiaceae (Coffee family)
மேற்கு தொடர்ச்சி மலைகளில் இயற்கையாக வளரும். சமவெளிகளில், ஈரப் பிரதேசங்களில், நதி ஓரங்களில், மணல், களிமண், சிறிய கூழாங்கற்கள் உள்ள நதிப் படுகைகளில், வெள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்களில் கடம்ப மரம் நன்கு வளரும்.
கடம்ப மரம் 15 லிருந்து 20 மீட்டர் உயரம் வளரும். வட்டமான "தலை" யுடன் அழகான மரம். மரப்பட்டை பழுப்பு நிறத்துடன் பல பிளவுகளுடன் இருக்கும். இலைகள் 30 செ.மீ. நீளமும் 10 லிருந்து 15 செ.மீ. அகலமும் உடையவை. பூக்கள் வட்டமாக, ஒரு "டென்னிஸ்" பந்து போல அழகானவை.
நறுமணமுள்ளவை. பழங்கள் சிறு பந்துகள் போன்றவை. பழுத்த பின் மஞ்சள் நிறமுடையவை. இனிப்பு + புளிப்பு சுவையுடையவை.
ஆயுர்வேத குணங்கள்
கடம்ப மரத்தின் வேர், மரப்பட்டை, பழங்கள் மருத்துவத்தில் பயன்படும் பாகங்கள். மூன்று தோஷங்களையும் (கபம், பித்தம், வாதம்) சமனப்படுத்தும். இலையும் மரப்பட்டையும் கசப்பு. கார சுவையுடையவை. வலியை குறைக்கும் ஆற்றலும் உடலின் நச்சுத் தன்மையை போக்கும் திறனும் உடையவை.
மருத்துவ பயன்கள்
கடம்ப மர இலைகளை சிறிது சூடு செய்து, ரணம், காயங்கள், புண்கள் மேல் வைத்து கட்டினால் வலி குறையும். உள்ளுக்கு இலைகளின் கஷாயத்தையும் கொடுக்கலாம்.
கண் தொற்றுகளுக்கு மரப்பட்டை களிம்பு நல்லது.
கடம்ப மரப்பட்டையின் கஷாயம் வயிற்றுப்போக்கு, சீதபேதி முதலியவற்றுக்கு நல்ல மருந்து.
மரப்பட்டை சாற்றுடன் சீரகம், சர்க்கரை சேர்த்து குடித்தால் வாந்தியை தடுக்கும்.
கடம்ப மரப்பழங்களின் சாறு, ஜுரத்தின் போது உண்டாகும். அதீத தாகத்தை தணிக்கும்.
ரத்த பித்தம், உடலில் நீர் சேர்தல் (Edema), இருமல் இவற்றுக்கு கடம்பா அருமருந்து.
பெண்களின் மாதவிடாயின் போது அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் கடம்ப மர இலைச்சாறு (அ) கஷாயம் குடிக்க இரத்தப் போக்கு குறையும்.
கடம்ப மர இலைகள் நீரிழிவு நோய்க்கு மருந்தாகும்.
கடம்ப பழங்களின் சாறு தாய்ப்பாலை அதிகரிக்கிறது.
சரும நோய்களுக்கும், சரும பொலிவுக்கும் கடம்பா மருந்தாக, அழகு சாதனமாக பயனாகிறது.
கடம்ப மர பழங்களும், பட்டையும் பலவீனத்தை போக்கும் 'டானிக்' ஆகவும் பயனாகின்றன.
கடம்ப மரத்தை உபயோகித்து தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் - கடம்ப த்வாக் சூரணம், கடம்ப பலரஸா.
இதர பயன்கள்
கடம்ப மரம் வருமானத்தை ஈட்டித் தரும் மரம். தீக்குச்சி, பென்சில் செய்வதற்கு மிகவும் ஏற்ற மரம். தமிழக வன இலாகா கடம்ப மரம் பயிரிட உதவுகிறது. அதை பற்றிய விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்துகிறது. காகிதம் செய்யவும், பெட்டிகள், சிறிய ஓமம், மரச்சாமான்கள் செய்யவும் கடம்ப மரம் உபயோகிக்கப்படுகிறது. செயற்கை பிசின்களுடன் கடம்ப மர பலகைகள் சுலபமாக ஒட்டும். இதனால் உறுதியான 'ப்ளைவுட்' (Plywood) தயாரிக்க கடம்ப மரம் பயனாகிறது.
கடம்ப மர பூக்களின் அருமையான நறுமணத்தால், தேனீக்கள் கவரப்படுகின்றன. இதனால் தேன் வளர்ப்பு தொழிலுக்கு கடம்ப மரம் ஏற்றது.
கடம்ப மர இலைகள் ஆடு, மாடுகளுக்கு உணவாகிறது. பூக்களை மனிதர்களும் சாப்பிடலாம்.
மரப்பட்டைகளிலிருந்து ஒரு மஞ்சள் நிற சாயம் கிடைக்கிறது.
'அத்தர்' தயாரிப்பில் கடம்ப மர பூக்கள் இடம் பெறுகின்றன

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,