அருந்ததி ராய் வரலாறு
அருந்ததி ராய் வரலாறு
இந்திய எழுத்தாளர் களில் ஆங்கில நாவல் எழுது கிறவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதில் வியாபார ரீதியாய் வெற்றி பெற்று பொருளும், புகழும் குவித்தவர்கள் வெகு சிலர்தாம். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ‘The God of Small Things’ படைப்பின் மூலம் உலகப்புகழ் பெற்ற அருந்ததி ராய் ஆவார்.
மிக உயர்ந்த கவுரவமான புக்கர் பரிசை அந்நூலின் மூலம் அவர் பெற்றார். டெல்லியில் நடிகையாயிருந்து பின்பு ஏரோபிக் பயிற்சியளிப்பவராகி எழுத்தாளராய் மாறிய அருந்ததி தமது பதிப்பாளர்களிடம் சுமார் 150 கோடி ரூபாய்களைப் பெற்றிருக்கிறார். அதுவும் முன் பணமாக. 20 நாடுகளில் வெளியான ‘The God of Small Things’ மூலம் கிடைத்த மதிப்பு சர்வதேச ஊடகங்களின் கவனத்தைத் தன்பக்கம் ஒரே நாளில் ஈர்த்து விட்டார் அவர்.
அருந்ததி ராய் வங்காளத்தில் 1961-ல் பிறந்து, கேரளத்துக் கடலோரம் அய்மனம் என்ற ஊரில் வளர்ந்தார். அவருடைய தாயார் மேரிராய் ஒரு வங்காள இந்துவை மணந்து, விவாகரத்து பெற்றவர். அருந்ததி தம்முடைய வாழ்க்கைச் சம்பவங்களையே நாவலில் விவரித்திருக்கிறார்.
தமது தாயைப் போல் ஒரு பாத்திரத்தை நாவலில் இடம்பெறச் செய்தார் அவர். நாவலில் வருவதுபோலவே நிஜ வாழ்விலும் அந்தத் தாய் ஒரு தேயிலைத் தோட்டத்தை நிர்வகிக்கிறார்.
அருந்ததி பத்து வயது வரை படிக்கவில்லை. அவருடைய தாயார் தொடங்கிய பள்ளிக் கூடத்தில் அவர் முதல் மாணவி யாய் சேர்கிறார். பிறகு லவ்டேல் ஸ்கூலில் சேர்ந்து விடுதியில் தங்கிப் படிக்கிறார். அப்போது அவருக்கு வயது பதினாறு.
ஒரு டீனேஜ் பெண் தன் வீட்டைவிட்டு வெளியேறு வது இயல்பான காரியமல்ல. ஆனால் அருந்ததிராய் அந்தக் காரியத்தைச் செய்தார். ஆம் படிப்பைவிட்டு, வீட்டைவிட்டு டெல்லிக்குச் சென்றார்.
அங்கே உரிமை யில்லாத நிலத்தில் குடியிருக்கும் கூட்டத்தில் அவரும் ஒருவராகிறார். தகரக் கூரையிட்ட சிறிய குடிசை. காலி பீர் பாட்டில்களை விற்றுப் பிழைப்பு.
அருந்ததி தம்மைப் பற்றிச் சொல்வார் ‘ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணுக்குரிய எந்தக் கட்டுப்பாடும் எனக்கு இருந்ததில்லை என்பதற்காய்க் கடவுளுக்கு நன்றி சொல்வேன்.
எனக்குத் தந்தையில்லை, சாதியில்லை, மதமில்லை. சம்பிரதாயம் ஏதுமில்லை. நீ எதைச் செய் தாலும் திருமணம் மட்டும் செய்து கொள்ளாதே’ என்று எந்தத் தாயாவது தன் மகளைப் பார்த்துச் சொல்லி யிருந்தாள் என்றால் இந்தியாவிலேயே அந்த மகள் நானாகத்தான் இருப்பேன்.
அருந்ததி ராய் படிப்பு
ராய் டெல்லியில் கட்டடக் கலை படித்தார். அப் போது புகழ் பெற்றிருந்த கட்டடக் கலைஞரான ஜெரார்ட்டா குன்ஹா என்பவருடன் வசித்தார்.
அங்கு மிங்குமாய் கிடைத்த வேலைகளில் கொஞ்சம் பணம், செலவுகளுக்கு சரியாயிருந்தது. ஆனாலும் சலிப்பு தட்டியது. அவர்கள் கோவா சென்றார்கள். கடற்கரை யில் பழச்சாறு விற்றவர் ஏழே மாதங்கள் மீண்டும் டெல்லி, மீண்டும் வெறுங்கையுடன்
‘மிகச் சிறுவயதில் இருந்தே இந்த உலகத்துடன் நான் சொந்தப் பொறுப்பில் பேசத் தொடங்கிவிட்டேன் என்று அந்த நாள் வாழ்க்கையை பிற்பாடு அவர் நினைவு கூர்ந்திருக்கிறார்.
நகர விவகாரங்களுக்கான தேசியக் கழகத்தில் வேலை கிடைத்தது ராய்க்கு நிஜாமுத்தின் பகுதியில் தங்கிக் கொள்ள இடம். பேருந்தில் பயணம் செய்யக் கூட காசு பற்றாக்குறை கையில் இருந்த ஒரு மோதிரத்தை (சிநேகிதி ஒருத்தியினுடையது) விற்றுதான் சமாளித்துக் கொண்டிருந்தார். பேருந்துக்குப் பதில் வாடகை சைக் கிளில் பயணம், தினம் ரூபாய் வாடகை.
ஒருநாள் ‘மாஸே சாஹிப் என்ற படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. வழியில் தற்செயலாய்ப் பார்த்த ப்ரதீப் கிருஷன் என்கிற இயக்குநர் தயவு அவர்களுக் இடையே பழக்கம் சாதாரணப் பழக்கம் என்கிற நிலையைக் கடந்து கொண்டிருந்தபோது இத்தாலி செல்கிற வாய்ப்பு கிடைத்தது ராய்க்கு. அங்கே நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது பற்றிய பயிற்சி. எட்டு மாதப் பயிற்சி.
இத்தாலியில் தங்கியிருந்தபோதுதான் தன்னை ஒரு எழுத்தாளராக அவர் உணர்ந்தார். மீண்டும் டெல்லி திரும்பியபோது அவரிடம் எதிர்காலம் பற்றிய திட்டம் எதுவும் இருந்திருக்கவில்லை. எனினும் கிருஷ்ணனுடன் அவர் தொடர்பு கொண்டார். தொலைக் காட்சித் தொடர் ஒன்றுக்கு (Banyan Tree’) எழுத வாய்ப்பு கிட்டியது.
1997 – ஏப்ரல் 4ஆம் நாள் இ God at Smarmings நாவல் வெளியானது. 1997 அக்டோபரில் பக்கம் உங்கள் உ தாடுகளில் புத்தக விற்பனை மூலம் புகழி ராய் அந்த தோவலை எழுதி முடிக்க ஐந்து ஆண்டுகள் சிரமப்பட்டுக்கிறார்.
தன்னுடைய காந்தகம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க வில்லை. யாராவது ஓர் இந்தியப் பதிப்பாளர் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பார் என்று நினைத்திருந்தார்.
ஹார்ப்பர் காலின்ஸ் (இந்தியா) எடிட்டரான பங்கஜ் மிஷ்ரா என்பவர் அதைப் படித்துக் கிளர்ச்சியுற்றார். கையெழுத்துப் பிரதிகளை மூன்று இங்கிலாந்து பதிப் பாளர்களுக்கு அனுப்பி வைத்தார். டேவிட் காட்வின் என்கிற ஏஜண்ட் விமானம் ஏறி இந்தியாவுக்கே வந்துவிட்டார்.
The God of Small Things
அவர்மூலம் ‘ராண்டம் ஹவுஸ்’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப் பட்டது. ராய்க்கு சன்மானமாய் வழங்கப்பட்ட தொகை இந்திய மதிப்பில் மூன்றரை கோடி ரூபாய். ஆறே மாதங்களில் 4 லட்சம் பிரதிகள் விற்று மிகப்பெரிய சாதனை படைத்துவிட்டது ‘The God of Small Things’ நாவல்.
உலகத்தின் ஒட்டுமொத்த பாராட்டுதலைப் பெற்ற ராயின் படைப்பு இந்தியாவில் அதுவும் கேரளத்தில் இருந்தே வாக்கு வாதங்களையும், வழக்கையும் எதிர் கொள்ளும்படியானது.
கதையில் ஒழுக்கக் கேடு இருப்ப தாயும், வாசகர்களின் மனத்தை தூய்மையற்றதாக்கி விடும் என்றும் பேசப்பட்டது.
ஆனால் ராய் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. அதே கேரளத்தில் தாழ்த்தப் பட்ட மக்கள் ‘இது நம்ம பெண்ணாச்சே’ என்று அவரை அன்புடன் வரவேற்றனர்.
1999 மே மாதத்தில் நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் அணைக்கட்டுத் திட்டத்தைக் கண்டித்து ராய் எழுதிய கட்டுரை பெரிய அளவில் பரபரப்பை உண்டு பண்ணியது. ‘இந்தியாவில் 30 பெரிய அணைகள் உள்ளன. அவை முன்பே ஐந்து கோடி மக்களின் வாழ்க்கையை வெறியுடன் விழுங்கித் தீர்த்தாயிற்று.. இப்படிப் போகிறது கட்டுரை.
ராய் போராட்டம்
நர்மதைப் பள்ளத்தாக்கு மக்களுக்காக ராய் போராட்டம் நடத்தினார். 2000 ஜனவரி 11-ஆம் நாள் 300 – 100 கிராமவாசிகளுடன் ராயும் கைது செய்யப்பட்டார். இரண்டே நாளில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அரசு அணைக் கட்டு வேலையைத் தொடங்கலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக ராய் சிறையிலடைக்கப்படுவார் என்றோர் அச்சுறுத்தல் இருந்தது. மார்ச் 2002-ல் ஓர் அடையாளக் கைது நடத்தி ராயை ஒரே நாளில் விடுவித்துவிட்டார்கள்.
ராயின் சிறப்பு அன்றாடப் பிரச்சனைகளைப் படைப் பாக்குவதுதான். ஆராய்ச்சி செய்யும் மாணவர்களிலிருந்து சாதாரண மக்கள் வரை எல்லாரையும் ஒரே மாதிரி கவர்ந்துவிட்டிருக்கிறது அவருடைய எழுத்து.
நவீனப் பட்டிருக்கும் இந்திய நகரங்களுக்கும், வறுமையுற்ற கிராமங்களுக்கும் நடுவே இன்னும் சரி செய்யப்படாத இடைவெளிதான் ராயை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
இன்றுவரை 40 மொழிகளில் அறுபது இலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. The God of Small Things’. ‘உங்கள் அடுத்த புத்தகம் எப்போது?’ என்ற கேள்விக்கு ராயின் பதில் ‘அதற்கான உந்துதலை நான் பெறும் போது என்பதாம். இன்னொரு கதைக்கான உந்துதல் அவருக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அந்த உந்துதலே அவருடைய நாடும் மக்களுந்தானே.
சமுதாய நிகழ்வுகளைப் பதிவு செய்வது ஒரு படைப் பாளியின் வேலை. அருந்ததி ராய் அந்த வேலையைச் சிறப்பாகவே செய்கிறார்.
நன்றி: ஹிஸ்டரி உலகம்
Comments