நாகல்கேணி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்பப் பள்ளியில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்களின் சார்பாக குழந்தைகள் தினம் கொண்டாட்டம்


நாகல்கேணி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்பப் பள்ளியில் அரசு பள்ளி முன்னாள் மாணவர்களின் சார்பாக குழந்தைகள் தினம் கொண்டாட்டம் செங்கல்பட்டு மாவட்டம்


செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை அடுத்துள்ள நாகல்கேணி உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்பப் பள்ளியில் நம் பள்ளி நம் வீடு  முன்னால் மாணவர்களின் சார்பாக குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

நம் பள்ளி நம் வீடு முன்னாள் மாணவர்களின் சார்பாக கொண்டாடப்பட்ட இந்த விழா அல்லாபகேஷ் அவர்கள் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் நம் பள்ளி நம் வீடு முன்னாள் மாணவர்கள் சங்கமத்தின் அங்கத்தினர்கள் விநாயகமூர்த்தி, அரவிந்தன், பிரான்சிஸ் ராஜ், பரிமளா பிரியா ஆகியோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பள்ளி கல்வி துறை ஆணைக்கிணங்க அனைத்துக் குழந்தைகளும் காலை இறைவணக்க கூட்டத்தில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் இந்த நாளில் சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர்களின் நலனுக்காகவும் எப்போதும் உடன் நிற்போம் என்றும், அவர்களுக்கு இருக்கக்கூடிய சமூக, பொருளாதார, பண்பாட்டுச் சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க எங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்வோம் என்றும் உறுதி கூறுகிறோம்.

முழுமையாகவும், சமத்துவத்துடனும் வெற்றிகரமாகவும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் இங்கு எந்தப் பாகுபாடும் இன்றி, அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்குரிய பாதுகாப்பை அவர்களுக்கு அளிப்பது இன்றியமையாதது என நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அவர்களை எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலவே முக்கியத்துவம் அளித்து நட்புணர்வை வளர்ப்போம் என்றும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

 இதனைத் தொடர்ந்து குழந்தைகள் தின விழாவில் குழந்தைகளுக்கு ரூபாய் 6000 மதிப்புள்ள எழுது பொருள் மற்றும் கடலை மிட்டாய் எள்ளு உருண்டைகள் போன்ற இனிப்பு வகைகளை கொடுக்கப்பட்டது. குழந்தைகள் அனைவரும் மிகவும் சந்தோசமாக வகுப்பறைக்கு சென்றனர்.

by

 D. ALLAHBAGESH

Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,