ஹைதராபாத், டெல்லி, பெங்களூருவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வீடு வாங்க முன்னுரிமை*

 


ஹைதராபாத், டெல்லி, பெங்களூருவில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் வீடு வாங்க முன்னுரிமை*புதுடெல்லி: வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே (என்ஆர்ஐ) இந்தியாவில் வீடு வாங்குவது குறித்து சிஐஐ-அனாராக் கருத்துக்கேட்பு நடத்தியது.


மொத்தம் 5,500 வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், அவர்களில் 60 சதவீதம் பேர் ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு ஆகிய மூன்று நகரங்களில் வீடு வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 22 சதவீதத்தினர் ஹைதராபாத்தை தங்கள் முதன்மைத் தேர்வாக குறிப்பிட்டுள்ளனர். 20 சதவீதத்தினர் டெல்லியையும், 18 சதவீதத்தினர் பெங்களூருவையும் தங்கள் தேர்வாக குறிப்பிட்டுள்ளனர்.


இது 2022-ம் ஆண்டு முதல் 6 மாதங்களுக்கான அறிக்கை ஆகும். 2021-ம் ஆண்டு இதே காலகட்டத்துக்கான அறிக்கையில் பெங்களூரு, புனே, சென்னை ஆகிய நகரங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதன்மைத் தேர்வாக இருந்தது.


டெல்லியில் காற்று மாசுபாடு தீவிரமாக உள்ளபோதிலும், பெங்களூரில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாதபோதிலும் அந்நகரங்களின் நவீனத் தன்மையால் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அங்கு வீடு வாங்க விரும்புவதாக கூறப்படுகிறது.


கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் வீடு வாங்குவது 20 சதவீதம்அதிகரித்து இருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,