போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

 

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி

 


 ANTI-DRUG AWARNESS PROGRAMME

 

மேற்கு முகப்பேரில் உள்ள அமுதா மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு (ANTI-DRUG AWARNESS ) உதவி ஆணையர் திரு மிகு வரதராஜன்  அவர்கள் தலைமையில்26/11/2022அன்று  மாணவ மாணவியர் பேரணி தொடங்கி வைக்கப்பட்டது

 இப்பேரணியில்  வி 7 நொளம்பூர் காவல் நிலைய கைச்சார்ந்த இன்ஸ்பெக்டர் திருமிகு  செல்வகுமார் , சப் இன்ஸ்பெக்டர்கள்  திருமதி சத்தியபாமா, திரு மோகன், திரு ரவி, திரு குமார் மற்றும் போலீஸ் கான்ஸ்டபிள் திருமதி வனஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,



 இப்பள்ளி மாணவர்களும் மாணவிகளும் பதாகைகளை ஏந்தி சென்றனர் . இப்பேரணி அமுதா  பள்ளி வளாகத்தில் தொடங்கி நொளம்பூர் காவல் நிலையம் தொடங்கி  குட்வில் அடுக்கு மாடி ,பூங்கா வழியாக  மீண்டும் அமுதா பள்ளி அடைந்தது

இந்த பேரணியின்  இறுதியில்  ) உதவி ஆணையாளர் திரு மிகு வரதராஜன்   அவர்கள் உரை நிகழ்த்தினார்,மாணவர்கள் தங்கள் இலட்சியித்தை அடைந்த பிறகும் வாழ்க்கையில் எந்நிலையிலும்  போதைப் பொருள் பயன்படுத்துவதில்லை என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் .


பள்ளித் தாளாளர் திருமதி கிருஷ்டிஜேம்ஸ் அவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி