நாடக, மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் செய்தி வாசிப்பாளர்.பூர்ணம் விஸ்வநாதன்
தமிழ்நாட்டின் பழம்பெரும் நாடக, மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர்.பூர்ணம் விஸ்வநாதன் பிறந்தது
15 நவம்பர் 1921 -
மறைவு 1 அக்டோபர் 2008)
இவர் தனது 18வது வயதில் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். சிறிதுகாலம் புது தில்லியில் வாழ்ந்த விஸ்வநாதன் 1945 இல் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக தன் பணியைத் தொடங்கினார். 1947இல் அகில இந்திய வானொலியில் முதன் முறை இந்தியா விடுதலைச் செய்தியைக் கூறியுள்ளார். மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து கலைத்துறையில் நுழைந்தார். பூர்ணம் தியேட்டர்ஸ் என்ற நாடகக் குழுவை ஆரம்பித்து ஏராளமான நாடகங்களை மேடை ஏற்றினார். அந்த நாடகக் குழுவின் பெயராலேயே சாதாரண விஸ்வநாதனாக இருந்த அவர், பூர்ணம் விஸ்வநாதன் என்று அழைக்கப்பட்டார்.
- எழுத்தாளர் சுஜாதா வின் 10 நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதன் மேடை ஏற்றி உள்ளார். 1979ம் ஆண்டு துவங்கி 1997ம் ஆண்டு வரை அவர் நாடகங்களை நடத்தி வந்தார். அடிமைகள், கடவுள் வந்திருக்கிறார், அன்புள்ள அப்பா, வாசல், ஊஞ்சல், சிங்கம் அய்யங்காரின் பேரன், பாரதி இருந்த வீடு உள்ளிட்ட 10 நாடகங்களை சுஜாதா எழுதி, பூர்ணம் விஸ்நாதன் மேடை ஏற்றினார்.
அண்டர் செக்ரெட்டரி, 50=50 போன்ற நாடகங்களை தானே எழுதியும் நடித்துள்ளார். கடைசியாக 1997 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அதன்பின்னர், அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் கோகுலம் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற பெயரில் நாடகங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்.
டெல்லி, லக்னோ, மும்பை ஆகிய நகரங்களில் இவர் நாடகம் நடித்துள்ளார். இவர் 86 படங்களில் நடித்திருக்கிறார். சில படங்கள்
- வருஷம் 16
- வறுமையின் நிறம் சிவப்பு
- தில்லு முல்லு
- மகாநதி
- விதி
- மூன்றாம் பிறை
- புதுப்புது அர்த்தங்கள்
- கேளடி கண்மணி
- ஆண்பாவம்
நினைத்தாலே இனிக்கும் படத்தில் இவரின் காமெடி சீன் உங்களை கட்யம் சிரிக்க வைக்கும்
‘
Comments