அறியலாம் ஆப்ஸ்* கூகுள் ஃபிட்

 அறியலாம் ஆப்ஸ்*கூகுள் ஃபிட்


எங்கு பார்த்தாலும் ஸ்மார்ட் வாட்ச், ஐவாட்ச், டைம் பீஸ், ஃபிட் வாட்ச், என நம் ஆரோக்கியத்தை டிராக் செய்யும் பல வாட்ச்கள் மார்க்கெட்டில் படையெடுக்கத் துவங்கிவிட்டன. குறைந்தது ரூ.2000 மாவது செலவு செய்தால்தான் கொஞ்சமாவது நல்ல பிராண்ட் ஸ்மார்ட் வாட்ச்கள் வாங்க முடியும். ஆனால் கையிலேயே இலவசமாக இருக்கும் ஹெல்த் டிராக்கரை நாம் கண்டுகொள்வதே இல்லை. கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகவே தரவிறக்கம் செய்துகொள்ள ஏதுவான கூகுள் ஃபிட் கிட்டத்தட்ட ஒரு ஸ்மார்ட் வாட்ச் கொடுக்கும் அத்தனை வசதிகளையும் பயனாளர்களுக்குக் கொடுக்கிறது.


வாக்கிங், ஜாக்கிங் எனில் கிலோ மீட்டர் கணக்கிடுதல், கலோரி எவ்வளவு செலவானது அதன் மதிப்பு, இதயத் துடிப்பு மற்றும் பல்ஸ் என அனைத்துமாக கூகுள் ஃபிட் நமக்குக் கொடுக்கும். இந்த கூகுள் ஃபிட் கொடுக்கும் இன்னொரு சிறப்பு அம்சம் எவ்வளவு நாம் ஆரோக்கியமான உடற்பயிற்சிகள் செய்கிறோமோ அதனைக் கொண்டு சில ஷாப்பிங் தளங்களில் ரிவார்டுகளும் பெறலாம். மேலும் ஸ்மார்ட் வாட்ச்களுடனும் இணைத்துக்கொள்ளலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி