நாவலாசிரியர் புஷ்பா தங்கதுரை என்கிற ஸ்ரீவேணுகோபாலன் காலமான தினமின்று. 🥲
நாவலாசிரியர் புஷ்பா தங்கதுரை என்கிற ஸ்ரீவேணுகோபாலன் காலமான தினமின்று.
கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட நாவல்களையும், சிறு கதைகளையும், தொடர்கதைகளையும் அவர் எழுதியுள்ளார். இவரது எழுத்து ஸ்டைல் வாசகர்களிடையே மிகவும் பிரபலமானது. அவர் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வந்தார்
தனது விறுவிறுப்பான, சிலாகிப்பான எழுத்தின் மூலம் 2 தலைமுறை வாசகர்களை மகிழ்வித்தவர் புஷ்பா தங்கதுரை.புஷ்பா தங்கதுரையின் எழுத்து ஸ்டைல் பிரபலமானது. சீரியாஸாகவும் எழுதுவார். கலகலப்பான கதைகளையும் கொடுப்பார்.ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறு. நீ என் நிலா, நந்தா என் நிலா, திருவரங்கன் உலா, மதுரா விஜயம் ஆகியவை அவரது சிறந்த நாவல்களுக்கு சில எடுத்துக் காட்டுகள். காதல் அல்ல காதலி, சரிதா பிளஸ் சரிதா, சிகப்பு ரோஜா கதைகள், துள்ளுவது இளமை, தாய்ப்பூ தாமரைப்பூ ஆகியவை அவரது படைப்புகளில் சில.
இவரது திருவரங்கன் உலா நாவல் மிகவும் பிரபலமானது. 14&ம் நூற்றாண்டில் இஸ்லாமிய மன்னர்கள் கோவிலில் புகுந்து ஆபரணங்களைக் கொள்ளையடிக்க எத்தனித்தபோது, வைணவர்கள் திருவரங்கத்தின் உற்சவர் விக்ரகத்தைப் பாதுகாக்கப் போராடுகிறார்கள். பல்வேறு வைணவத் தலங்களுக்கு மதுரை, நெல்லை என ஊர் ஊராகத் தூக்கிக்கொண்டு சென்று பாதுகாக்கிறார்கள். திருப்பதியிலும் சிலகாலம் அந்த விக்ரகம் பாதுகாக்கப்படுகிறது. நெருக்கடி முடிந்து சிலை கோயிலுக்கு வந்து சேர்வதுதான் அந்தச் சரித்திர நாவலின் பின்னணி. இந்த நூலை எழுதியதற்காக புஷ்பா தங்கதுரையை, ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து அவரை யானை மீது அமர வைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று கெளவரப்படுத்தினர்.
16& நூற்றாண்டில் வாழ்ந்த அனந்தரங்கம் பிள்ளை எழுதிய டைரிக் குறிப்பு அன்றைய புதுச்சேரியில் குறுக்குவெட்டுத் தோற்றத்தை அறிய உதவியது. அந்த டைரியின் சில பக்கங்கள் ப்ரெஞ்சு மொழியில் வெளியாகி இருப்பதை அறிந்து 40 ஆண்டுகளுக்கு முன் அதை தமிழில் மொழிபெயர்த்தவர் புஷ்பா தங்கதுரை. அதை சிறு புத்தகமாக ஆசிரியர் சாவி வெளியிட்டார்.
புஷ்பாவின் பூர்வீகம் நெல்லை மாவட்டம் கீழநத்தம் கிராமம் ஆகும். ஆரம்பத்தில் தபால் துறையில் பணியாற்றினார். பின்னர் வேலையை விட்டு விட்டு முழு நேர எழுத்தாளர் ஆனார்.இவரது ஊதாப்பு கண்சிமிட்டுகிறது திரைப்படமாகவும் உருவானது. இவர் எழுதிய ஆண்டவன் இல்லா உலகம் எது,நல்ல மனம் வாழ்க ஆகிய திரைப்படப் பாடல்களும் பிரபலானவை. பல கதைகளின் காட்சிகள் அனுமதியில்லாமலேயே சினிமாவில் பயன்படுத்தப்பட்டன. அவர் எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பத்திரிகையில் எதைப் பற்றி எழுதச் சொன்னாலும் எழுதித் தர வேண்டியது தன் கடமை என்றே இருந்தார். சிவபெருமானா, சிவப்பு விளக்குச் சிங்காரியா என அவர் கவலைப்பட்டது இல்லை.
Comments