சரஸ்வதியும் சிங்காரவேலனும்

 சரஸ்வதியும் சிங்காரவேலனும்







எழுதுவதை நிறுத்திக்கொள்வதாக ஜெயகாந்தன் அறிவித்தபோது உண்டான துக்கமும் சோர்வும் எஸ்.ஜானகி பாடுவதை நிறுத்தப்போவதாகத் தெரிவிக்கையிலும் ஏற்பட்டது. சொல்லப்போனால், இரண்டுபேருமே அம்முடிவை மிகத் தீர்மானமாக எடுத்து அறிவித்தனர்.
ஜெயகாந்தன் தாம் எழுதிய எழுத்துகள் தமக்கு நிறைவளித்துவிட்டன என்றும், மேலும் தொடர்வதற்கு சந்தர்ப்பமில்லை என்றும் தெரிவித்திருந்தார். கூடவே தம்மைத் தாண்டி வேறு எவரும் வருவதற்கு வாய்ப்பில்லை எனும் பெருமிதமும் அவருக்கிருந்தது. ஜானகியோ பிறருக்கு வாய்ப்பளிக்கும்பொருட்டு பாடுவதை நிறுத்திக்கொள்வதாக பேட்டியளித்தார். ஒருவரே முதன்மைப்படுவதால் புதியவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறதென்னும் கரிசனம் அதில் வெளிப்பட்டது.
தம்மைத் தாண்டி ஒருவரோ பலரோ வரவேண்டுமென எண்ணிய ஜானகியை அன்றிலிருந்து அம்மாவாக உணரத் தொடங்கினேன். சுயாதீனத்துடன் ஜெயகாந்தனும் ஜானகியம்மாவும் அம்முடிவை எடுக்கவும் அறிவிக்கவும் எல்லா உரிமையும் உண்டு. ஆனால், அவர்களை ரசித்தவர்களுக்கும் அவர்களால் கவரப்பட்டவர்களுக்கும் அது, கவலைதரும் தகவல். ஒருவர் தம் வாழ்வில் எதை பிரதானமாகக் கொண்டு அறியப்பட்டாரோ அதையே நிறுத்திக்கொள்ள துணிச்சலும் தெளிவும் தேவை.
ஒரு கலைஞன் குறிப்பிட்ட புள்ளியை நோக்கி நகர்வது மட்டுமல்ல. எஸ்.ஜானகி என்கிற பெயர், அறுபது ஆண்டுகளுக்கும்மேலாக தென்னிந்திய திரையிசைப்பரப்பில் செழித்த செல்வாக்கைச் சம்பாதித்திருக்கிறது. வேறு எந்தப் பாடகிக்கும் இத்தனை நீண்ட கால சினிமாவாழ்வு கிடைக்கவில்லை. மொழியை உணர்ந்து, வரிகளை உள்வாங்கிப் பாடக்கூடிய மிகச்சில பாடகிகளில் ஜானகி முதன்மையானவர்.
எந்தப்பாடலை எடுத்துக்கொண்டாலும் அதில் அவருடைய முத்திரைகளை அழுத்தமாகப் பதித்திருக்கிறார். மெல்லிசையில் காணக்கூடிய அழகையும் ஆலாபனைகளையும் துள்ளலிசையிலும் தரமுடிந்த ஒரே பாடகி அவர். அவருடைய ஆளுமையையும் வாழ்வியல் சவால்களையும் அறிந்துகொள்ள இந்நூல் உதவும்
- யுகபாரதி
இணையத்தில் இருந்து எடுத்தது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,