*பலே' பாதங்கள்*
*பலே' பாதங்கள்*
உலகிலேயே மிகப்பெரிய பாதங்களை கொண்ட பெண்மணி என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார், ஹான்யா ஹேபர்ட்.
உலகிலேயே மிகப்பெரிய பாதங்களை கொண்ட பெண்மணி என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார், ஹான்யா ஹேபர்ட். அமெரிக்காவின் ஹூஸ்டன் அடுத்த டெக்சாஸ் பகுதியில் வசிக்கும் இவரது உயரம் 6 அடி மற்றும் 9 அங்குலம். கால்களின் உயரத்துக்கு ஏற்ப பாதங்களின் அளவும் பெரியதாக இருக்கிறது.
இவரது வலது கால் பாதம் 13.03 அங்குல நீளமும், இடது பாதம் 12.79 அங்குல நீளமும் கொண்டிருக்கிறது. இது போன்ற பாதம் எவருக்கும் இல்லாததால் கின்னஸ் அமைப்பு உலகசாதனையாக அங்கீகரித்திருக்கிறது. ஹெர்பர்ட், தனது கால் பாதம் பெரியதாக இருப்பதை நினைத்து பெருமிதம் கொண்டாலும் காலணி அணிவதற்கு சிரமப்படுகிறார்.
இவரது பாதத்துக்கு பொருத்தமான செருப்புகள், ஷூக்கள் கிடைப்பதில்லை. பெரிய அளவுகளை கொண்ட காலணிகளை வாங்கி அதில் சில மாற்றங்களை செய்து பயன்படுத்துகிறார். ஆன்லைன் தளங்கள்தான் தனது காலணிகள் தேர்வுக்கு ஏற்றதாக அமைந்திருப்பதாகவும் சொல்கிறார்.
''ஆன்லைனில் தேடிப்பார்த்து மிகப்பெரிய காலணிகளில் சிலவற்றை வாங்குகிறேன். அவற்றை இன்னும் கொஞ்சம் அகலமாகவும் மாற்றுவேன். அதனால் அவை என் கால்களுக்கு பொருந்தும். ஆன்லைன் ஷாப்பிங்தான் என் விருப்ப தேர்வாக அமைந்திருக்கிறது. ஏனெனில் எந்தக் கடையும் தனது கால்களுக்குப் போதுமான அளவு கொண்ட காலணிகளை வைத்திருப்பதில்லை.
விரும்பிய அளவுகளில் ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடிவதால் கடைகளுக்கு சென்று காலணிகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. ஆன்லைன் வழியே பழக்கமான பெரிய கால்கள் கொண்ட மற்ற பெண்கள் எனக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். அவையும் எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது'' என்கிறார்.
Comments