மழைக்காலத்தில் பரவும் 'புளூ காய்ச்சல்'... செய்ய வேண்டியது என்ன

 மழைக்காலத்தில் பரவும் 'புளூ காய்ச்சல்'... செய்ய வேண்டியது என்ன?
பருவமழைத் தொடங்கி இருக்கும் இந்த நேரத்தில் 'புளூ காய்ச்சல்' அதிகரித்து வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ரங்கராஜன் கொடுத்த ஆலோசனைகள் இதோ…


ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் ஜனவரி மாதம் வரை புளூ காய்ச்சல் வருவது வழக்கமானதுதான். இந்த காய்ச்சல் ஆறு நாட்கள் வரை இருக்கும். உரிய சிகிச்சை மூலம் இதில் இருந்து மீளலாம். குழந்தைப் பருவத்தில் உடல் உறுப்புக்கள் வளர்ச்சி அடையும். மேலும் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே குழந்தைகளுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.


புளூ காய்ச்சலின் பாதிப்பு எப்படி இருக்கும்? புளூ காய்ச்சல் நுரையீரலைப் பாதிக்கக்கூடியது. இரண்டு முதல் ஆறு நாட்கள் வரை காய்ச்சல் நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண் டைக் கரகரப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பாதிப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு 'நிமோனியா' எனப்படும் உடலில் நீர் இழப்பு மற்றும் நீர்ப் பற்றாக்குறை அதிகமாக ஏற்பட்டால், காய்ச்சல் வந்தவுடன் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். புளூ காய்ச்சலுடன் 'எச்1என்1' எனும் ஒரு வகை இன்புளூயன்சா வைரஸ் கிருமித் தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. ஆகவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். இதற்கு மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயசிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடாது.


காய்ச்சல் அதிகமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?


காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது முதலில் ஈரத்துணியால் உடலைத் துடைக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது உடல் வெப்பம் குறையத் தொடங்கும். பிறகு ஒரே ஒரு பாராசிட்டமால் மாத்திரை கொடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். எல்லா அரசு மருத்துவமனைகளிலும் ரத்தப் பரிசோதனை, அவசர சிகிச்சை முறைகள் 24 மணி நேரமும் வழங்கப்படுகின்றன. எனவே தாமதிக்காமல் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். காய்ச்சல் இருக்கும்போது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். காய்ச்சல் இருந்தால் உடலில் வேகமாக நீர் இழப்பு ஏற்படும். அந்த நேரத்தில் நீர்ச்சத்துக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 'ஓ.ஆர்.எஸ் உப்பு சர்க்கரைக் கரைசல்' அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. அதுதவிரப் பழச்சாறு வகைகள் அரசு மருத்துவமனையில் கிடைக்கின்றன. இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிகள் என்ன? கை கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். சூடான உணவுகளைச் சாப்பிட வேண்டும். காய்கறி சூப், அசைவ சூப் பருகலாம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியை கடைப்பிடித்து முககவசம் அணிய வேண்டும். காய்ச்சல் இருந்தால், உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் இருக்க ஒரு லிட்டர் தண்ணீரில் 4 டீஸ்பூன் சர்க்கரை ஒரு டீஸ்பூன் உப்பு கலந்து குடிக்கலாம். இதனால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்