இந்த ரசிகனின் ஒரே ஒரு விண்ணப்பம்

 


ஒரு ரசிகனாக நான் மிகவும் விரும்பும் நடிகர்களில் ஒருவரான கமலஹாசனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்பதோடு கடந்து போய்விட விரும்பவில்லை.

பெரிதும் விரும்புவதாலேயே இந்த ரசிகனின் ஒரே ஒரு விண்ணப்பம் இது..
உங்கள் மனதில் உங்கள் ஆயுளுக்குள் செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய பக்கெட் லிஸ்ட் வைத்திருக்கிறீர்கள்.
பட்டியலில் இருக்கும் அயிட்டங்களில் முக்கியமானதாக நீங்கள் கருதுவது தூய்மையான அரசியல்!
அதை நோக்கி மய்யம் துவங்கி வெற்றி தோல்வி தாண்டி துவக்கப் புள்ளிகள் வைத்தீர்கள். அந்த அழகான லட்சிய கோலத்திற்கு இந்தப் புள்ளிகள் போதாது, லட்சக்கணக்கான 'புள்ளிகள்' தேவை என்பதையும் உணர்ந்திருப்பீர்கள்.
அந்த லட்சியப் பயணம் மெதுவாகவோ வேகமாகவோ நிகழ்ந்துகொண்டே இருக்கட்டும். பயணம்தான் முக்கியம்.
ஆனால்..
இதேப்போல சினிமாவில் இன்னும் நீங்கள் செய்ய நினைத்திருக்கும் விஷயங்கள் உங்கள் கவனத்திற்கும் செயல்பாடுகளுக்கும் காத்திருக்கின்றன.
உங்கள் திரை உலக வாழ்வில் வரலாறு காணாத நீங்களே பிரமித்த நெகிழ்ந்த வெற்றியை விக்ரம் படத்திற்குத் தந்துள்ளோம்.
அதனாலேயே எனது அச்சம் அல்லது கவலை அல்லது சந்தேகம்.. அடுத்தடுத்தும் இதே மாதிரியான பிரமிப்பையும், நெகிழ்ச்சியையும் தொடர்ந்து ருசிக்க ஆசைப்பட்டு விடுவீர்களோ என்பதே..
வசூல் வெற்றி அவசியம்தான். ஆனால் வசூலை இரண்டாம்பட்சமாகக் கருதி கருத்தியல் மற்றும் முத்திரைப் படங்களை அடிக்கடி கொடுத்து வருபவர் நீங்கள். அந்தப் படங்களின் பட்டியல் நீளம். பெயர்கள் அனைவருக்கும் தெரிந்தவை. அந்தப் படங்களை உங்களால் மட்டுமே சிந்திக்கவும், தரவும் முடியும்.
ஆகவே அந்த மாதிரியான முத்திரைப் படங்களை உங்களிடம் கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்ப்பதை பிறந்த நாளில் ஒரு நினைவூட்டலாக முன்வைத்து..
மீண்டும் வாழ்த்துகிறேன்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்