நெஞ்சு பொறுக்காத ஆத்திரமே வருகிறது

 


‘‘எந்தப் பேருந்து நிலையத்தின் பொது கழிப்பிடத்திற்குள் நுழைந்தாலும், மூத்திரம் வருவதற்குப் பதிலாக நெஞ்சு பொறுக்காத ஆத்திரமே வருகிறது. கட்டணம் கொடுத்து சிறுநீர் கழிக்கப் போனால், கால் வைக்க முடியாத அளவு அருவருப்பாக இருக்கிறது அந்த இடம். பேருந்தில் பயணம் செய்கிற மக்கள் கோடீஸ்வரர்கள் அல்ல. கைகளும் கால்களும் காப்புக் காய உழைத்து சம்பாதிப்பவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை அலட்சியப்படுத்துகிற அந்த காண்ட்ராக்டர் ஓர் அரசியல்வாதியாகவே இருப்பார். அருவருப்பான அந்தக் கழிவறைக்குள் எந்த அமைச்சராவது போவாரா? அவருடைய பெண்டாட்டி, பிள்ளைகள் போவார்களா? அவர்கள் போக முடியாத ஒரு இடத்திற்கு பொதுமக்களைப் போகச் சொல்லுவது அக்கிரமம் இல்லையா?

இந்தக் கோபம் காழ்ப்புணர்ச்சியிலிருந்து வரவில்லை. இயலாமையிலிருந்து வருகிறது. ஒரு கழிப்பிடத்தில் நேர்மையாக இல்லாதவர்கள், எங்களை மற்ற விஷயங்களில் எப்படி ஏமாற்றுவார்கள் என்கிற ஆற்றாமையில் வருகிற கோபம் இது. இதை நான் எழுதினால், ‘ஓர் எழுத்தாளன் இப்படி எழுதலாமா?’ என்று கேட்கிறார்கள். பூக்கள் பூப்பதையும், நதியின் ஓட்டத்தையும், மழையின் சாரலையும் வர்ணிப்பது மட்டுமே எழுத்தாளனின் வேலை இல்லை. எம்முடைய மக்களின் நாசிகள் நுகரும் துர்நாற்றத்தை எழுத்தின் மூலம், அந்த இடத்திற்கு வராதவர்களின் மூக்கும் உணரும்படி எழுதுவதே எழுத்து. அதுவே படைப்பாளனின் முதன்மையான பணி!’’
- நாஞ்சில் நாடன்
நன்றி: குங்குமம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,