திரை நடிகர்களும் இலக்கியவாதிகளும்

 


திரை நடிகர்களும் இலக்கியவாதிகளும்

நடிகர்களுக்கு எத்தகைய ஈர்ப்பு இருக்கிறதோ அதே அளவிற்கு இலக்கியவாதிகளுக்கும் உள்ளதைத் தொடர்ந்து கண்டு வருகிறோம். வெறித்தனமான பற்றுதல் கொண்டவர்களையும் பார்த்திருக்கிறோம்.
புத்தகக் காட்சியில், மனுஷ்ய புத்திரனின் ரசிகர்களைக் கண்டு வியந்து இருக்கிறேன்.
சமீபத்தில் நான் கண்டது பவா செல்லதுரையிடம்.
அன்றைக்கு வந்திருந்தவர்கள் அவரோடு ஆர்வத்தோடு உரையாடியதையும், புகைப்படம் எடுத்துக் கொள்வதையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதில் ஒரு பெண்மணி அழுதுவிட்டார். கதை சொல்வதன் மூலமே ஒருவரை இவ்வளவு பாதிப்புக்கு உள்ளாக்க முடியுமா? முடியும் என்பதை பவா செல்லதுரை நிரூபித்திருக்கிறார்.
குழல் யாழ் இசை மட்டும் அல்ல. திறமையான கதைசொல்லியும் கண்களைக் கசியவைக்க முடியும் என்பதற்கு பவா உதாரணம்.
எப்போதாவது ஏனடா இந்த பதிப்புத் துறைக்கு வந்தோம் என்று ஒரு சிறு சலிப்பு வரும்போது இது போன்ற காட்சிகளைக் காணும்போது உற்சாகம் கொள்கிறோம் உந்துதல் பெறுகிறோம்.
I am a proud Publisher.
by ஓளிவண்ணன் கோபாலகிருஷ்ணன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,