*நான்கு முக சிவலிங்கம்
*நான்கு முக சிவலிங்கம்*
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் நச்னா என்ற இடத்தில் அமைந்துள்ளது, சவுமுக்நாத் மந்திர். இந்த ஆலயம் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கின்றனர், வரலாற்று ஆய்வார்கள்.
இந்த ஆலயத்திற்குள் சிவலிங்கத்தின் நான்கு பக்கத்திலும் பக்கத்திற்கு ஒன்றாக சிவபெருமானின் முகமும் வடிக்கப்பட்டிருக்கிறது. விஷ்கிரகஹன் ரூப், பாினய் ஷாந்த் ரூப், அர்த்தனரேஸ்வரர் ரூப், க்ரூம் ரூப் என்று இந்த நான்கு முகங்களையும் வடமாநில பக்தர்கள் அழைக்கின்றனர்.
சிவனைப் பற்றி கூறும் புராணங்கள், அவருக்கு ஐந்து முகங்கள் உண்டு என்று சொல்கின்றன. கிழக்கு திசை நோக்கிய முகம் தத்புருஷம், மேற்கு திசை நோக்கிய முகம் சத்யோஜாதம், தெற்கு நோக்கிய முகம் அகோரம், வடக்கு திசை நோக்கிய முகம் வாமதேவம், மேல் நோக்கிய முகம் ஈசானம் என்று அழைக்கப்படுகிறது.
மேற்கண்ட சவுமுக்நாத் ஆலயத்திலும், இந்த முறைப்படியே சிவலிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவனின் முகங்கள் வடிக்கப்பட்டிருப்பதாகவும், மேல்நோக்கிய ஈசானிய முகத்திற்கு பதிலாக, பாணத்தின் மேற்பகுதியே இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Comments