இசையரசியும் இசைஞானியும்

 


இசைஞானி அறிமுகமான அன்னகிளியில் சுசீலாம்மா பாடிய சொந்தமில்லை பந்தமில்லை பாடல் தியேட்டரில் 2ஆம் நாள் நீக்கப்பட்டது. ரெக்கார்டில் கேட்டு மகிழ்ந்த ரசிகர்கள் படத்தில் பாடல் நீக்கப்பட்டதை கண்டித்து ஆர்பாட்டம் செய்ய, மீண்டும் படத்தில் இந்த பாடல் சேர்க்கப்பட்டது.


இசைஞானி மெல்லிசை மன்னருடன் வாத்திய கலைஞராக முதன் முதலில் பணியாற்றிய அவளுக்கென்று ஒரு மனம் படத்தில் வரும் "மலர் எது என் கண்கள்" பாடலை பாடியவர். இசைஞானி இசை அமைத்த முதல் தெலுங்கு படமான பத்ரகாளியில் “சின்ன சின்ன கன்னையா”, “அடிகாவே அக்கடா”, “மஹிஷாசுருதனு” என 3 பாடல்களை பாடியவர்.  இசைஞானி கன்னடத்தில் இசை அமைத்த முதல் படமான “மாத்து தப்பத மகா”வில் மரியாத ஹரிஷடா பாடலை பாடினார்.


முதன் முதலில் இசைஞானி பாடிய ஜோடிப்பாடலான தென்ன மரத்தில தென்றல் அடிக்குது பாடலை இவருடன் இணைந்து பாடியது குறிப்பிடதக்கது. மேலும் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, எங்க ஊரு காவல்காரன் (சிறுவாணி தண்ணி பாடல் தவிர) என சில  படங்களில் அனைத்து பாடல்களையும் சுசிலாமாவே பாடினார். அரண்மணை கிளி படத்தில் வரும் “நட்டுவச்ச ரோஜா செடி” என்ற பாடலே இசைஞானியின் இசையில் சுசீலாமா கடைசியாக பாடியது.


அன்னக்கிளியில் சோகப்பாடலை சோலோவாக பாடிய பிறகு இசைஞானியின் 2 ஆவது படமான பாலூட்டி வளர்த்த கிளியில் வரும் “வாடியம்மா பொன்மகளே” பாடலில் பாடும் நிலாவுடனும், 3ஆவது படமான பத்ரகாளியில் வரும் “கண்ணன் ஒரு கை” பாடலில் ஜேசுதாசுடனும் என அடுத்தடுத்து படங்களில் பாடினார். 


இசைஞானியின் இசையில் P.சுசிலா அம்மா பாடிய ஜோடி பாடல்களின் கலெக்சன் அன்றைய கால கட்டங்களில் TDK 90 கேசட்டுகளில் அதிகம் ரசிகர்களால் வெகுவாக கவரப்பட்டு பதியப்பட்ட பாடல்களின் தொகுப்பு...


Side A

1.கண்ணன் ஒரு கைக்குழந்தை 

2. நதியோரம் நாணல் ஒன்று

3.பேசக்கூடாது வெறும் பேச்சில்

4.காளிதாசன் கண்ணதாசன்

5, என் கண்மணி உன் காதலன்

6. சோலை புஷ்பங்களே என் சோகம்

7. திருத்தேரில் வரும் சிலையோ

8. சிந்து நதிக்கரை ஓரம் அந்தி

9. நேரமிது நேரமிது நெஞ்சில்


Side B

1. மெல்ல மெல்ல என்னை தொட்டு

2. மனதிலே ஒரு பாட்டு மழை

3. மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

4. பாட வந்ததோர் கானம்

5. ராசாத்தி மனசுல இந்த ராசாவின் 

6. ஆசையில பாத்தி கட்டி நாத்து

7. மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே

8. பட்டுகன்னம் தொட்டு கொள்ள 

9. முத்து மணி மாலை எனை தொட்டு


இசைஞானியின் இசையில் வந்த ஆல்பமான திருவாசகம் வெளியீட்டு விழாவில் சுசிலாமா கலந்து கொண்டு இசைஞானியை வாழ்த்தியது குறிப்பிடதக்கது. அதே போல சுசிலா அம்மாவின் திரை இசை பயணம் 65 வருடங்களை சிறப்பிக்கும் விதமாக 2019ல் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இசைஞானி கலந்து கொண்டு வைர மோதிரத்தை பரிசளித்து இசையரசி சுசீலா அம்மாவிற்கு தன் மரியாதையையும் அன்பையும் செலுத்தினார்.


இசையரசிக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்13.11.2022... 🌺❤️🙏

by



Ananthakrishn Ranganathan


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,