'அச்சம் விட்டு உச்சம் தொட்ட தமிழ்வாணன்' . புத்தக வெளியீடு
ஆரம்பம் முதல் இறுதி வரை மிக அழகாக, உயிரோட்டத்துடன் நடந்து முடிந்தது புத்தக வெளியீடு. கலகலப்பு, உணர்ச்சிமயம் என அனைத்தும் இங்கே இருந்தன.
"மேடைகளில் நீங்கள் நிறுத்தாமல் பேசுகிறீர்கள்.
தான் பேசும்பொழுது தமிழ்வாணன் பற்றிய பல அரிய தகவல்களை தெரிவித்தார் திரு. ஜவஹர்.
இவ்வளவு புகழ்ச்சிக்கு நான் தகுதியானவன் தானா? என என்னை யோசிக்க வைத்தவர் திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள்.
தனது தந்தையை பற்றி கூறியதைவிட, இந்நூலை அணு அணுவாக ரசித்து பேசியது எனது வாழ்நாள் பாக்கியம்.
நாற்பது ஆண்டுகால, பிரபலமான பத்திரிகையாளர் - எழுத்தாளராகிய திரு. லேனா தமிழ்வாணன் அவர்கள், என்னுடைய எழுத்துகளை சிலாகித்து பேசியபொழுது, நான் உணர்ச்சிவசப்பட்டது உண்மைதான்.
"வங்கி அதிகாரிகள் எண்ணில் தான் புலிகளாக இருப்பார்கள், இவர் எண்ணிலும் எழுத்திலும் புலியாக இருக்கிறார்"
"அப்பாவைப் பற்றி எழுத வேண்டும் என்று சரவணக்குமார் வந்த பொழுது, நான் தயங்கினேன். இவர் எப்படி எழுதுவாரோ என நினைத்தேன். ஆனால் முதல் அத்தியாயத்தை படித்ததும், இந்நூல் எழுத சரியான நபர் இவர்தான் என முடிவு செய்தேன்."
"எந்த பிள்ளையும் அவர்களின் பெற்றோர் திருமணத்தை பார்க்க முடியாது. ஆனால் எங்களது பெற்றோர் திருமணத்தை நாங்கள் நேரில் கண்டது போல் இருக்கிறது இவரது விவரிப்பு"
"தமிழ்வாணனைப் பற்றிய விவரங்களை அதன் சல்லி வேர் வரை ஆராய்ந்திருக்கிறார்" என திரு.லேனா அவர்கள் பேசினார்கள்.
"நல்லா சரளமாக பேசுகிறாரே... "
"பேச மாட்டாரா பின்னே... அவர் யூனியன் லீடராச்சே... " -லேனா சார்.
பெரிய ஆளுமைகளுக்கு முன்பாக தங்கு தடங்கள் இன்றி நான் பேசியது எனக்கே வியப்பு தான்.
எனது அழைப்பை ஏற்று வந்திருந்து விழா சிறக்க உதவிய, பலரின் மனம் கவர்ந்த பாக்கெட் நாவல் அசோகன் அண்ணன், ஓவிய பிரம்மாக்கள் திரு. மணியம் செல்வன், திரு. ஷ்யாம், எழுத்தாளர் - மருத்துவர் திரு. பாஸ்கரன், வங்கி மேலாளர்கள் திரு. செல்வம் பெர்ணான்டோ, திரு. கோபாலகிருஷ்ணன் (ஓய்வு), சக பணியாளர்கள் திரு & திருமதி. வள்ளியப்பன், திரு. ஜான் மார்கஸ், திரு. வெங்கடேசன், திரு.பாபு, திரு.சுரேந்திரன், திரு. வசந்த், எனது உயிர் நண்பர்கள் ஜெயநாராயணன், சசிக்குமார், திருமதி. மல்லிகா ஆச்சி மற்றும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
by
சரவணகுமார்
Comments