*மின் இணைப்புகளில் ஆதார் எண்ணை இணைக்கும் இரண்டு நடைமுறைகளை வெளியிட்டது மின்வாரியம்*

*மின் இணைப்புகளில் ஆதார் எண்ணை இணைக்கும் இரண்டு நடைமுறைகளை வெளியிட்டது மின்வாரியம்*



I.இணையதளம் மூலம் ஆதார் எண் இணைக்கலாம்.


வழிமுறைகள்:


1மின்சார வாரியத்தின் இணையதளத்திற்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும்.


https://www.tnebltd.gov.in/adharupload/adhaentry.xhtml , 


2.முதலில் மின் இணைப்பு எண் கேட்கும் அதில் மின் இணைப்பு எண் உள்ளீடு செய்ய வேண்டும். 


3.பின்பு அந்த மின் இணைப்பில் உள்ள ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு OTP வரும் பின்பு OTP அந்த எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். 


4அதன் பின்பு ஆதார் எண் மற்றும் ஆதாரில் உள்ள பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். 


5.பின்பு ஆதார் நகல் 300kb மிகாமல் IMAGE பதிவேற்றம் செய்யவேண்டும்.


இணையதளம் மூலம் ஆதார் எண் இணைப்பவர்களின் விவரங்களை எப்படி சரி பார்ப்பது பற்றிய பிரிவு அலுவலகங்களில் நடைமுறை:


1.பிரிவு அலுவலர்களின் மூலம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ID எண் மற்றும் PASSWORD உள்ளீடு செய்து.


2. பிரிவு அலுவலகங்களில் LT BILLING ஆதார் எண் UPDATE/VERIFICATION அதனை கிளிக் செய்து சென்ற பிறகு AADHAR VERIFICATION கிளிக் செய்ய வேண்டும்.


3. தற்போது இணையதளம் மூலமாக ஆதார் எண்ணை உள்ளீடு செய்தவர்களின் மின் இணைப்புடன் கூடிய பெயர் வரிசையாக வரும்.


4. அதில் மின் இணைப்பு எண்னை கிளிக் செய்தால் ஆதார் இணைத்தவர்களின் மொபைலில் எண், ஆதார் எண் அவர்களுடைய ஆதார் அட்டை நகல் இணைக்கப்பட்டிருக்கும். 


5.அது சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்து அதில் கீழ் APPROVE  என்று இருக்கும் அதனை தேர்ந்தெடுத்து APPROVE கிளிக் செய்து செய்ய வேண்டும்.


6. ஆதார் எண் பெயர் தவறுதலாகவும் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆதாரின் நகல் தெளிவாக இல்லாத பட்சத்தில்  கீழ் REJECT என்று இருக்கும் அதனை தேர்ந்தெடுத்து REJECT கிளிக் செய்து செய்ய வேண்டும்.


II. பிரிவு அலுவலகங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகள்


1.பிரிவு அலுவலர்களின் மூலம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ID எண் மற்றும் PASSWORD உள்ளீடு செய்து.


2.பிரிவு அலுவலகங்களில் LT BILLING ஆதார் எண் UPDATE/VERIFICATION அதனை கிளிக் செய்து சென்ற பிறகு AADHAR UPDATE கிளிக் செய்ய வேண்டும்.


3. முதலில் மின் இணைப்பு எண் கேட்கும் அதில் மின் இணைப்பு எண் உள்ளீடு செய்ய வேண்டும். 


4.பின்பு அந்த மின் இணைப்பில் உள்ள ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு OTP வரும் பின்பு OTP அந்த எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். 


5.அதன் பின்பு ஆதார் எண் மற்றும் ஆதாரில் உள்ள பெயரை உள்ளீடு செய்ய வேண்டும். 


6.பின்பு ஆதார் நகல் 300kb மிகாமல் IMAGE பதிவேற்றம் செய்யவேண்டும்.


பிரிவு அலுவலகங்களில் பிரிவு அலுவலர்கள் மூலமாக பதிவேற்றம் செய்யப்படும் ஆதார் எண் மற்றும் பெயர் AADHAR VERIFICATION தோன்றாது. நேரடியாக APPROVAL  ஆகிவிடும்.


*பிரிவு அலுவலகங்களில் உள்ள உதவி மின் பொறியாளர்,வணிக உதவியாளர் மற்றும் வணிக ஆய்வாளர் மட்டுமே இதனை மேற்கொள்ள வேண்டும்* 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,