Love today - /திரைப்படம் ஒரு பார்வை.../#சுமி_சினிமாஸ்

 Love today


-

திரைப்படம் ஒரு பார்வை.../#சுமி_சினிமாஸ்

செல்போனால் உறவுகளுக்குள் நிகழும் மாற்றங்கள் குறித்து ரசனையுடன் ரசிக்கும் திரைக்கதையுடன் யூத்புல்லாக கோமாளி பட டைரக்டர் ப்ரதீப் ரங்க நாதன். தனது App(a) Lock என்ற குறும்படத்தை என்லார்ஜ் செய்து எடுத்த முழு நீள திரைப்படம்.
இவானா கதா நாயகி...இளமை பட்டாசு ! குட்டிப்பொண்ணு குளிர்ச்சி!
எமோஷனல் சீன்களில் மட்டும் கிளி தலையில் பனங்காயாக தென்பட,
கதை..திரைக்கதை, இயக்கம், ஹீரோ என பன்முகம் காட்டும் ஹீரோ ப்ரதீப் டிஷ்டிங்ஷனில் பாஸ் ஆகியிருக்கிறார்.
வசனங்கள் ஷார்ப்!
யுவன் இருக்கும் இடம் தெரியாமல் இசையமைத்திருக்கிறார்.. BMG களில் மட்டும் இளமை...!
பெண்களுக்கு சமூக வலைத்தளங்களில் வரும் ஆபாச மெசேஜ்களுக்கு தரும் முக்கியத்துவம் தியேட்டரில் சற்று அமுங்கிப்போவது போன்ற பீல் !
வேணு சாஸ்திரி சத்யராஜ்... கனகச்சிதம் !
அம்மாவாக ராதிகா செல்போனை தட்டிவிடுவதும், திருமண மண்டபத்தில் கொடுக்கும் அட்வைஸிலும் அக்மார்க் அம்மாவாக அள்ளுகிறார் மனதை !
சாத்வீகமாக யோகி பாபு, அக்காவாக ரவீணா ,ரெவியாக ஆஜீத் என பக்கா பக்குவம்...!
ஹீரோவாக தனுஷை நினைவுப்படுத்தும் ப்ரதீப் தனக்கென ஒரு ஸ்டைலில் தென்படாமல், க்ளைமேக்ஸ் அழுகையில் தேற முயற்சித்திருக்கிறார்.
பாஸிட்டிவாக உறவுகளை நம்புங்கப்பா என்ற மெசேஜை விதைத்து, ஆடியன்ஸ் மனதில் விருட்சமான ப்ரதீப் க்கு வாழ்த்துகள் !
பூமர்..கிரிஞ்சு என்ற அர்த்தங்களுடன் கை தட்டி இளசுகளுடன் இளசுகளாக ரசித்து வரலாம்.
Love today 2K கிட்ஸ் மட்டுமின்றி பெரியவர்களுக்குமான படம் !

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,