Oru Thekkan Thallu case -/ . நான் சமீபத்தில் ரசித்த மலையாள திரைப்படம்

 


| Oru Thekkan Thallu case -

. நான் சமீபத்தில் ரசித்த மலையாள திரைப்படம்

என்னோட பார்வையில் இந்த படத்தைப்பற்றிய அனுபவம் இ,ங்கே

கேரளத்தின்  ஒரு அழகிய கடற்கரை கிராமத்தில் , இரு மனிதர்களின்  வாழ்வில்அவர்களின்  பெருமையும் ஈகோவும்   மோதி ஆதிக்கம் செலுத்துகிறது

இதனால் நேரும் விபரீதங்களே இந்தப்படம்

நகைச்சுவையுடன் ஓரு ஆக்ஷன் படம் என சொல்லலாம்

எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதியஅம்மிணிபிள்ளை வெட்டு கேஸ்’ (Amminipillai Vettu Case) என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள மலையாளத் திரைப்படம்ஒரு தெக்கன் தல்லு கேஸ்’ (Oru Thekkan Thallu case). இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீஜித்.என் இயக்கியுள்ளார்

. இந்தப் படத்தின் திரைக்கதை கேரளாவின் வர்கலா அருகேயுள்ள சிறு கிராமத்தை பின்னணியாகக் கொண்டு  பயணிக்கிறது

. படம் மொத்தமும் அந்த சிறிய கடற்கரை கிராமம்தான்

 படத்தின் அத்தனை  காட்சிகளும் அதன் போக்கும் கொஞ்சம் கூட ரசிகர்களை அயர்ச்சிக்குள்ளாக்கவில்லை என சொல்லலாம்

நாம அந்த கிராமத்திலே வசிப்பதை போல பீலிங்

 கேமரா அங்கேயே தான் சுற்றிக் கொண்டு இருக்கிறது.

படத்தின்  திரைக்கதையின் வேகத்தில் ஒரு  மகா யுத்தமே நடந்துவிடுவது என்பதே நிஜம்

கடற்கரை கிராமத்தின் லைட் ஹவுஸ் பராமரிப்பாளர் அம்மிணி (பிஜூ மேனன்) அவருடைய மனைவி ருக்மணி (பத்மப்ரியா). இவர்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் பெண் வஸந்தி (நிமிஷா சஜயன்), இவரின் காதலன் பொடியன் (ரோஷன் மேத்யூ).

 ஒருநாள் பொடியனும் வஸந்தியும் அவர்களின்  காதலைக் கட்டுப்படுத்த தவறி, அம்மிணி வீட்டின் அருகில் இன்பத்தில் திளைத்திருக்க, அம்மிணி இதனைக் கண்டிக்கும்போது அவருக்கும் பொடியனுக்கும் கைகலப்பாக  .

 அவ்வளவுதான், இருவருக்கும் இடையிலான ஈகோ சண்டை  இதான் கதை

பிஜு மேனன்.  அதன் பின்னர் அவர் பொடியனையும் அவனது நண்பர்களையும் பிஜு மேனன் பழிவாங்கினாரா. திரைக்கதையில் மேஜிக் ஈகோவும் வன்மமும் முற்றிவிட்டால் அங்கே எதிரியின் உயிருக்கே உத்தரவாதம் கிடையாது

 ஆனால், பிஜு மேனனிடம் இருப்பது அவ்வளவு பெரிய வன்மமோ பழிவாங்கும் திட்டமோ இல்லை. இந்த இடத்தில் தான் ரொம்பவே கிளாஸிக் தரத்துடன் நகர்கிறது திரைக்கதை

 பிஜு மேனனின் முடிவு இதுதான் என தெரிந்ததும், பொடியனின் நண்பர்கள் வரிசைக் கட்டி வந்து தங்களது கணக்கை தீர்த்துவிட்டு போகும் இடமெல்லாம் குபீர் சிரிப்புக்கு பஞ்சமில்லாத காட்சிகள் மீண்டும்

 

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளில் 'டிரைவிங் லைசென்ஸ்', 'அய்யப்பனும் கோஷியும்' ஆகிய படங்கள் இதேமாதிரியான ஈகோ மோதலை பின்னணியாக வைத்து மலையாளத்தில் வெளியாகியது

 

.

 அதே போல கருவில் ஒரு கதையை கையில் எடுத்து இயக்குனர் வெற்றி பெற்று இருப்பதற்கு காரணம் படம் மொத்தமே சீரியசா எடுக்கப்படாமல் நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டதன் காரணமாக இருக்கலாம்

 

. போலீஸாக வரும் குஞ்சுபக்கி, குஞ்சுகுஞ்சு, பிரபாக்குட்டன், லோபேஸ் - பொடியனின் நண்பர்களாக நடித்துள்ள இவர்களின் கேரக்டர்கள் யதார்த்தமான வெள்ளந்தி மனிதர்களின் சாயல்களை அப்படியே பிரதிபலிக்கிறது., மயில் மார்க் உடல் வலி எண்ணெய் விற்பனை செய்பவர், வனக்காவலராக ஊருக்குள் அவ்வப்போது வரும் நபர் என நிறைய குட்டி குட்டியானப் பாத்திரப் படைப்புகள் சிறப்பு.

. கதாப்பாத்திரங்களின் தேர்வும், காட்சிப்பதிவுகளும் சிறப்பாக இருப்பதே அதற்கு காரணம். ஒரு மெலோ டிராமாவான இந்த திரைப்படத்தின் காட்சிப்படிமங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு சிறுகதை படிக்கும் உணர்வைத் தருவதே

ஆக்சன், காதல், பிடிவாதம், வஞ்சம், வன்மம் என அத்தனை உணர்வுகளையும் வெற்றிலையை மென்று துப்புவதைப் போல எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நடித்து பிரமிக்க வைக்கிறார் பிஜு மேனன்

 பத்மப்ரியாவையும், நிமிஷா சஜயனையும் காணும்போதும் கண்களும் மனதும் நிறைகிறது. இருவருமே தங்களது பாத்திரங்களை வெகு இயல்பாக செய்திருக்கின்றனர்

இவர்களின்  இடையேயான உரையாடல்களும் மிக முக்கியம் . பெண்களின் உணர்வுகளையும் அவர்களது இன்னொரு பக்கத்தையும் விரசம் இல்லாமல் பகிர்ந்துக்கொள்ளும் வசனங்கள் எல்லாமே கதைக்குள் அடங்கி விடுகிறது

ரோஷன் மேத்யூ.முகத்தில் வன்மத்தை வெளிக்காட்டிக் கொண்டு, உள்ளுக்குள் தொடை நடுங்கியாக பிஜு மேனனுக்கு பயந்து ஒளிந்துகிடப்பதெல்லாம் யதார்த்தத்தை மீறாத அழகியல் காட்சிகள்

, விதிகளை மீறிய விடலைப் பருவத்து காதலின் திண்டாட்டம் எப்படி இருக்கும் என்பதற்கு விடையாக ரோஷன் மேத்யூ, நிமிஷா சஜயன் இருவரும் சந்திக்கும் காட்சிகளைக் கூறலாம்

. இவர்களின்   லிப்லாக் காட்சிகளும் இருப்பதால், சற்று கவனத்துடன் பார்ப்பது நல்லது

[2]

 சாமியாரின் பேச்சைக் கேட்டு பிஜு மேனன் அவமானப்படுவதும், அடுத்தக் காட்சியிலேயே பத்மப்ரியா வந்து அவரை முறுக்கிவிட்டதும் நடக்கும் வேடிக்கையும், ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமாகும் என்பதைப் போன்ற ரகளையானக் காட்சி. இருவருக்குமான காதலின் மையப்புள்ளியாக இந்தக் காட்சியை சொன்னால், க்ளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியில் ரோஷன் மேத்யூவுக்கான கணக்கை பிஜு மேனனுக்குப் பதிலாக பத்மப்ரியா தீர்க்கும் இடம் இன்னும் தரம். இவை நம் மனதில் ஒட்டிக்கொள்கின்றன

மதுநீலகண்டனின் ஒளிப்பதிவு சிறப்பான காட்சி அனுபவத்தை தருகிறது

. பாடல்கள், பின்னணி இசை, எடிட்டிங், கலை என அனைத்துமே 'ஒரு தெக்கன் தல்லு கேஸ்' படத்திற்கான கிளாஸிக் டச்சை தருகிறது.

 இயக்குநர் ஸ்ரீஜித்துக்கு இந்தப் படம் கொடுத்துள்ள அறிமுகமும் அடையாளமும் இனிவரும் அவரின் படைப்புகளுக்கு கண்டிப்பாக வலு சேர்க்கும். என்பதில் சந்தேகமில்லை

 

ஒரு சிறிய நிலப்பரப்புக்குள் அடர்த்தியான பாத்திரங்களும் வீரியமான கதையும் ஒன்றிணைந்தால் இதுபோன்ற கிளாஸிக்கான திரைப்படங்கள் சாத்தியமாகும் என்பதற்கு 'ஒரு தெக்கன் தல்லு கேஸ்' சான்றென சொல்லாம்.

 இது போல கதைகள்  அட்டாகசமான வாழ்வியலோடு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும் என நம்பலாம்

 இன்றைய காலக்கட்டத்தில் நடப்பது போல் இந்தக் கதையை எடுத்திருந்தால் இந்தப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்காது.  காரணம் சாதாரண சம்பவத்தை சுற்றியே கதை நகர்ந்தாலும், அதன் பின்னணியில் 1980 களில் நடப்பதாக இருக்கும் காட்சி அனுபவங்கள் தான், ரசிகர்களை கட்டிப்போடுகிறது. '

. கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்போது காணக் கிடைக்கிறது.


'
ஒரு தெக்கன் தல்லு கேஸ்' ஓடிடி ரசிகர்கள் தவற விடக்கூடாத சிறப்பான
திரைப்படம்

by

உமாதமிழ்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி