செல்வி ஹேன்ஸி எழுதிய கவிதைப் புத்தகம் queen வெளியிடு

 


கடந்த வாரத்தில் இரு வெவ்வேறு நிகழ்ச்சிகள்.

ஒன்று நாகர்கோவில் இன்னொன்று சென்னையில்.

12 வயது நிரம்பிய செல்வி ஹேன்ஸி எழுதிய கவிதைப் புத்தகத்தை வெளியிடும் வாய்ப்பு கிடைத்தது.
இப்பொழுது யாரும் படிப்பதில்லை. எல்லோரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கியுள்ளார்கள் என்று பொத்தாம் பொதுவான கருத்தை சமூகத்தில் சிலர் கொண்டுள்ளதைப் பார்த்திருப்போம். இப்படி கருத்துச் சொல்லும் கண்மணிகள் யார் என்று பார்த்தால் வாழ்க்கையில் 25 வயதுக்குப் பிறகு எந்த புத்தகத்தையும் எடுத்து முழுமையாகப் படிக்காதவர்களாக இருப்பார்கள்.
நடைமுறையில், படிப்பவர்கள் படித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஏராளமான புத்தகங்கள் பல தலைப்புகளில் வெளிவருகின்றன. பல புதிய வாசகர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு மகிழ்ச்சியான செய்தி சிறுவர், சிறுமிகள் அதிகமாகப் படிப்பதைப் பார்க்கிறோம். படிப்பதன் தொடர்ச்சியாக எழுதுகிறார்கள். நமது பதிப்பகத்திலேயே 15 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளர்கள் 10 பேருக்கு மேல் உள்ளனர். ஷர்வந்த் என்ற தம்பி மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார்.
நாகர்கோவிலுக்குச் சென்றதற்கு மிக முக்கிய காரணமே ஹேன்ஸி அவர்களுக்கு ஊக்கமும் உந்துதலும் அளிக்கும் என்கிற நம்பிக்கையில். ஆனால் அங்குச் சென்ற பிறகுதான் தெரிந்தது யாம் தான் அவர்களிடத்திலே ஊக்கமும் உந்துதலும் பெற்றோம் என்பதை.
ஆதர்ஷ் வித்யா கேந்திர பள்ளியின் தாளாளர் முனைவர் கோபால் சுந்தரம் பெரும் வியப்பில் ஆழ்த்தி விட்டார். காரணம் முதன்முறையாக எமது அனுபவத்தில் ஒரு பள்ளி மாணவியின் புத்தகத்தைப் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் முன்பாக வெளியிட்டது. ஏறத்தாழ 2 மணி நேரம் மாணவர்களும் ஆசிரியர்களும் அமர்ந்து நிகழ்ச்சியைக் கண்டு களித்தது, நிச்சயமாக நூலாசிரியர் ஹான்ஸியின் வாழ்க்கையில் மறக்க முடியாத உன்னதமான நாளாக அமர்ந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டும் அல்ல அன்றைக்கு அவருடைய பிறந்தநாள். இதை விட வேறு என்ன சிறந்த பிறந்தநாள் பரிசை பள்ளிக்கூடம் மற்றும் பெற்றோர் வழங்கிட முடியும்.
என்னுடைய உரையில் சொன்னேன் புத்தக வெளியீட்டினை மாணவர்கள் முன்பாக நடத்தியதன் காரணமாக இவர்களிலிருந்து பல ஹான்ஸிகள் உருவாகுவார்கள் என்றேன்.
தாளாளர் பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை தன் வீட்டில் வைத்திருப்பதாகவும் தொடர்ந்து படித்து வருவதாகவும் கூறினார் பெருமையாக இருந்தது. ஆச்சரியமான விஷயம்.
இன்றைக்குப் பல ஆசிரியர்கள் பாடப் புத்தகங்களைத் தாண்டி எதுவுமே படிக்காத ஒரு சூழலில் தாளாளர் அத்தனை புத்தகங்கள் படித்து இருக்கிறார் என்று அறியும் போது உவகைக் கொண்டோம். இதன் தொடர்ச்சியாகப் பள்ளியின் முதல்வர் ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கூட்டாக வாசிப்பை நேசிக்கிறார்கள். அப்படிப்பட்ட பள்ளிக்கூடங்களில்தான் ஹார்வி போன்ற விதைகள் துளிர்த்து செடியாகி, மரமாகிப் பூத்துக் குலுங்குகிறது.
பெற்றோர் ஹேம்லின் மற்றும் சேம்ஸன் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
இன்று காலை எழும்பூர் புத்தக நிலையத்தில் எம்டிஜி அரங்கில் வாரந்தோறும் கூட உள்ள சென்னை புத்தக குழு தொடங்கப்பட்டது. பேராசிரியர் முனைவர் வீ‌ அரசு அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 'புத்தகங்களின் வளர்ச்சி 1835லிருந்து 2000 வரை' என்னும் வரலாற்றை மிக அழகாக நேர்த்தியாக ஆய்வு நோக்கில் உரையாற்றினார். சமீபத்தில் இந்து தமிழ் நாளிதழில் வெளியான என்னுடைய கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு உரையைக் கட்டமைத்தார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக வகுப்பறையில் அமர்ந்து மாணவர்களாய் பாடம் கேட்கும் பாக்கியம் பெற்றோம். அதனைத் தொடர்ந்து அரை மணி நேரம் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.


ஒரு வாரம் தமிழ், அடுத்த வாரம் ஆங்கிலம் என மாற்றி மாற்றி நடத்த உள்ளோம். கலந்து கொள்ள விழைபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
by




Y

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி