நினைவுறுத்தும் நாள் (Remembrance Day)


நினைவுறுத்தும் நாள் (Remembrance Day) 🐾


🎯இது போரில் தமது உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களையும் மக்களையும் நினைவில் நிறுத்தும் நாள் ஆகும். அதாவது முதலாம் உலகப் போர் முடிவில் காமன்வெல்த் நாட்டு கூட்டுப் படைக்கும் ஜெர்மானியருக்குமிடையே ஒரு சமாதான உடன்படிக்கை ஒப்பந்தமானது.


இப் போர் நிறுத்தம் 1918ம் ஆண்டு, 11ம் மாதம், 11ம் திகதி, காலை 11 மணிக்கு நிகழ்ந்தது. இப்போர் நிறுத்தப்பட்டதையும் போரினால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையிலும் அன்றிலிருந்து இந்த நாள் நினைவில் நிறுத்தப்படுகின்றது.


சிவப்பு நிற பொப்பி மலர்கள் இந்த நாளுக்குரிய சின்னமாக விளங்குகின்றது. பொப்பிச் செடிகள், கொடூரமான போர் நடைபெற்ற பிளாண்டர் எனும் இடத்தில் மிகையாகப் பெருகிக் காணப்பட்டன. இதன் சிவப்பு நிறம் போரில் சிந்திய குருதியின் நிறத்தை நினைவுபடுத்தியது.


போர் மருத்துவரும் கவிஞருமான சோன் மாக்கிரே எனும் கனடிய வீரரின் "பிளாண்டர் புலத்தில்" எனும் கவிதையின் வரிகள் வீரர்களைப் புதைத்த இடங்களில் வளரும் பொப்பிச் செடிகளைக் குறிப்பிட்டது. இக்கவிதை மூலம் பொப்பி பிரபல்யம் அடைந்தது. நினைவுறுத்தும் நாளில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொப்பிகளை அணிவது வழக்கத்தில் வந்தது.


இந்த நாள் ஐக்கிய இராச்சியத்தில் ஐந்தாம் சோர்ச் மன்னரால் நவம்பர் 7, 1919ம் ஆண்டு முதலாம் உலகப் போரில் உயிர்களைத் தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூரும் நாள் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது.] எனினும் இன்று அனைத்துப் போரிலும் உயிர் நீத்தவர்களை இந்த நாளில் நினைவு கூருவர்.கனடாவில் "லெஸ்ட் வீ போர்கெட்" (lest we forget) எனும் வாக்கியம் இந்நாளுடன் தொடர்புடையதாய் இருக்கின்றது, போர்த் தியாகிகளை ஒருபோதும் மறத்தலாகாது எனும் எச்சரிக்கையை இந்த வாக்கியம் தெரிவிக்கின்றது.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,