இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!

 இனிமேல் டபுள் கேம் ஆடலாம்.. சைக்கிள் கேப்ல WhatsApp செட்டிங்ஸ்-க்குள் புகுந்த புதிய Mode!


வாட்ஸ்அப்பில் உள்ள செட்டிங்ஸ்-ல் சைலன்ட் ஆக ஒரு புதிய மோட் (Mode) சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே வாட்ஸ்அப்பில் சில முக்கியமான புதிய அம்சங்கள் அறிமுகமான வண்ணம் உள்ளன
அதில் கம்யூனிட்டீஸ் (Communities), செல்ப்-சாட் (self-chat) மற்றும் பில்டர் பை அன்ரீட் (Filter by unread) போன்றவைகள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சில வாட்ஸ்அப் அம்சங்கள் ஆகும்.

அந்த பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள மோட்! பல வகையான புதிய அம்சங்களோடு சேர்த்து, வாட்ஸ்அப் நிறுவனம் கம்பானியன் மோட் (Companion mode) என்கிற ஒரு அம்சத்தையும் அறிமுகம் செய்துள்ளது. கம்பானியன் மோட் என்றால் என்ன? இதனால் என்ன பயன்? இதை அணுகுவது எப்படி? இது யாருக்கெல்லாம் மிகவும் உதவிகரமாக இருக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!
கம்பானியன் மோட் என்றால் என்ன? இரத்தினச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் - கம்பானியன் மோட் என்றால் ஒரே வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை இரண்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு புதிய வாட்ஸ்அப் அம்சம் ஆகும். அதாவது இந்த அம்சத்தின் கீழ் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை இரண்டு ஆண்ட்ராய்டு ட்வைஸ்களுடன் (அதாவது ஒரு ஆண்ட்ராய்டு இணைக்க முடியும்!
இது எப்படி வேலை செய்யும்? உங்கள் மெயின் டிவைஸில் (அதாவது உங்களின் பிரதான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில்) உள்ள வாட்ஸ்அப்பை திறந்து அதில் உள்ள செட்டிங்ஸ்-க்கு (Settings) சென்றால், அங்கே லிங்க்டு டிவைஸஸ் (Linked Devices) என்கிற விருப்பம் இருக்கும். அதை கிளிக் செய்தால், செக்கென்டரி டிவைஸை (அதாவது இன்னொரு ஆண்ட்ராய்டு டிவைஸை) இணைக்க அனுமதிக்கும் ஆட்டோ ஜெனரேட்டட் க்யூஆர் கோட் (Automatically generated QR code) ஒன்றை காண்பீர்கள்.

பாதி வேலை முடிந்தது! கிடைக்கப்பெற்ற க்யூஆர் கோட்-ஐ கொண்டு மெயின் டிவைஸில் உள்ள வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை செக்கென்டரி டிவைஸ் உடன் இணைக்கலாம்! அதாவது உங்கள் மொபைல் போனில் உள்ள வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை டெஸ்க்டாப் உடன் எப்படி இணைப்பீர்களோ - கிட்டத்தட்ட - அதே செயல்முறையின் கீழ் தான் இந்த கம்பானியன் மோட் செயல்படும். இருப்பினும், இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இந்த அம்சம் தற்போது பீட்டா வெர்ஷனில் மட்டுமே அணுக கிடைக்கிறது.

கடந்த மே மாதத்தில் இருந்தே கிசுகிசுக்கப்பட்டது! முன்னரே குறிப்பிட்டபடி, இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டாவிற்கான ஆண்ட்ராய்டு 2.22.24.18 வெர்ஷன் வழியாக அணுக கிடைக்கிறது. எனவே நீங்கள் வாட்ஸ்அப் பீட்டாவில் ரிஜிஸ்டர் செய்து இருந்தால் உடனே உங்கள் ஆண்ட்ராய்டு டேப்லெட்டில் வாட்ஸ்அப்பை இன்ஸ்டால் செய்து, இந்த அம்சத்தை முயற்சி செய்து பார்க்கவும் நினைவூட்டும் வண்ணம் இந்த அம்சத்தின் அறிமுகம் ஆனது, கடந்த மே மாதத்தில் இருந்தே கிசுகிசுக்கப்பட்டது. ஒருவழியாக 2022 ஆம் ஆண்டு முடிவடைவதற்குள்ளேயே அறிமுகமாகி விட்டது! இது ஒரு ஆண்ட்ராய்டு போன் மற்றும் ஒரு ஐபோனை அல்லது ஒரு டேப்லெட்டை பயன்படுத்தும் அனைவருக்குமே மிகவும் வசதியான ஒரு அம்சம் ஆகும்!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,