இருக்கின்ற நாட்களில் இன்புற்றிருப்போம், இருப்பவை பகிர்வோம்,


2022 ஆம்

வருடத்தின்

இறுதி

நாட்களில்

இருக்கிறோம்.!!


இந்த வருடத்தில்

என்னால்

உங்களுக்கேதும்

நன்மை நடந்திருந்தால்

அதற்காக மகிழ்கிறேன்,

வருத்தமோ தீமையோ

நடந்திருப்பின்

அதற்காக

வருந்துகிறேன்.!!


காலம்

மிக விசித்திரமானது,

கலைத்து போட்ட

சீட்டு கட்டு மாதிரி,

முன் பின்

தெரியாதவர்களை

நண்பர்களாக்கும்,

நண்பர்களை

பகைவராக்கும்,

பகைவர்களை

அன்பராக்கும்.!!


உணர்வுகளின்

அடிப்படையில்

அமைகிறது

மனித வாழ்க்கை,

பல முடிவுகளும்,

சில தவறுகளும்

கடந்தே பயணிக்கிறது

வாழ்க்கை..!!


ஆரம்பம்

அறிந்த மனிதன்,

முடிவினை அறிய

வாய்ப்பில்லை,

அடுத்த ஆண்டு

இந்த நேரம்

இப்படி எழுத இயலுமா?!

இவ்வுலகில் இருப்பதும்

இல்லாததும்

இறைவன் விருப்பம்.!!


ஆகவே

இருக்கின்ற நாட்களில் இன்புற்றிருப்போம்,

இருப்பவை பகிர்வோம்,

வருகின்ற ஆண்டு(2023 )

வளம்,

நலம் சேர்க்கட்டும்...!!


நட்பு தொடருமென

நம்பிக்கையில்

பயணிப்போம்..!!


நன்றி,வணக்கம்.

ஜெய் ஹிந்த். என்றும் அன்புடன்,

கவிமுரசு பிரவீன்..

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்