ISR Ventures 5நிமிட குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா

 

ISR Ventures   5நிமிட குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா

 


ISR Ventures    குழந்தைகளின் உரிமை என்கிற தலைப்பில் நடத்திய  5 நிமிடக்குறும்படப்போட்டியின் விருது வழங்கும் விழா 29.12.2022 அன்று  தமிழ் நாடு திறந்த நிலைப்பல்கலைகழக அரங்கில் நடைபெற்றது.

   இந்த நிகழ்வில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தார்









.  ISR Ventures சோலையப்பன், ISR செல்வகுமார், இயக்குநர் ராசி அழகப்பன் தமிழ் நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் எம்.மணிவண்ணன் மற்றும் பூ.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தமிழ் நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் புதிய ஊடகப்புலம் உதவி பேராசிரியர்கள் முனைவர் பூ.சித்ரா மற்றும் முனைவர் சி.கார்த்திகேயன் ஆகியோர் ISR செல்வகுமார் உடன் இணைந்து நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.

ISR Ventures சோலையப்பன் அவர்கள் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியில் .

பேராசியர் எம்.மணிவண்ணன் மற்றும் பூ,தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்

அதனைத்தொடர்ந்து,  ISR 5 நிமிட்ப்போட்டியில் முதல் மூன்று இடம்பிடித்த குறும்படங்களும் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட You are special என்கிற குறும்படமும் திரையிடப்பட்டது.

அதனையடுத்து, குழந்தைகளின் உரிமை என்பதை அடிப்படையாக வைத்து முத்தமிழின் இயக்கத்தில் உருவான மைம் கலை நிகழ்ச்சி அரேங்கேறியது.

விருதுவழங்கும் நிகழ்வுக்கு முன்னர் உரையாற்றிய ISR செல்வகுமார், மரத்தின் வேரானது எப்படி பூமியில் ஆழப்பதிந்துகொண்டே இருக்குமோ அதைப்போலத்தான் இயக்கு நர் சேரனும், உலகம் முழுவதும் வாழும் தமிழ்ர்களின்  மனதில் ஆழப்பதிந்துகொண்டிருப்பவர்.

இந்த குறும்பட போட்டியில் கலந்துகொண்ட வாத்சல்யம் படத்தின் இசையமைப்பாளர்கள் ஆகாஷ்ராஜா மற்றும் ராம்குமார் என்கிற இரண்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள்.. என்று அறிமுகப்படுத்தியபோது அரங்கம் அதிர்ந்தது. அவர்களுள்  நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆகாஷ்ராஜ் மேடையேற்றப்பட்டு கெளரவிக்கப்பட்டார், அவரை மேடையில் நடு நாயகமாக அமர வைத்து அழகுபார்த்த சேரனின் செயலும் நெகிழ்ச்சியாக இருந்தது.

அதனைத்தொடர்ந்து, இறுதிச்சுற்றில் தேர்வான 11 படங்களில் குழந்தைகள்  மனநல ஆலோசகரை வைத்து ஒரு ஆவணப்படத்தை இயக்கிய ஸ்ரீமனின் பெற்றோர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

இறுதிச்சுற்றுக்கு தேர்வான ரீனா கவுர் திலன் இயக்கிய You are special க்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. ரீனா கவுர் திலன், பஞ்சாபிலிருந்து இந்த போட்டியில் கலந்துகொண்டவர் என்பதும், ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மேம்பாட்டிற்காக தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கிவருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனைத்தொடர்ந்து விருதுகள் வழங்கப்பட்டன

 

மூன்றாவது இடத்தை, புதுமை பூக்கள் மற்றும் மாற்றம் பகிர்ந்துகொண்டன. ஸ்கூலுப்போலாமா இரண்டாம் இடத்தை பிடிக்க, செவக்காட்டு சிற்பங்கள் முதலிடத்தை பிடித்தது.

வெற்றிபெற்றவர்களுக்கு கேடயமும் சான்றிதழ்களையும் நடிகர் இயக்குனர் சேரன் வழங்கினார்

, முதல் மூன்று இடம் பிடித்த குறும்படங்கள் பார்வையாளர்கள் கண்டு களிக்க திரையிட்ப்பட்டன

 வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளையும் வழங்கி கெளரவித்த இயக்குநர் சேரன் பேசியபோது, இந்த குறும்படங்களை பார்க்கும் போது, இன்னும் பத்து படம் இயக்கவேண்டும் என்கிற உத்வேகம் எழுகிறது. குறிப்பாக செவக்காட்டு சிற்பங்களுக்கு போட்டியாக நாமும் ஒரு படம் இயக்கவேண்டும் என்று தோன்றுகிறது

 

குறும்படத்தின் மையக்கரு குழந்தைகள் உரிமை என்பதாக இருந்ததால் சிறுமிகள் பிரணயா மற்றும் பைம்பொழில் ஆகியோருக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்

 

இறுதியாக, தமிழ் நாடு திறந்தநிலைப்பல்கலைக்கழக உதவிபேராசிரியர் முனைவர் சி.கார்த்திகேயன் நன்றியுரை நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது

 

 











முன்னதாக, இறுதி சுற்றுக்கு தேர்வான 11 படங்களை இயக்கிய இயக்குநர்கள் அனைவருக்கும் மைசிக்ஸர்.காம் சார்பாக ஒளிப்பதிவாளர் CJ ராஜ்குமார் எழுதிய திரைப்பட லென்ஸ் மற்றும் காட்சியமைப்புகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஃபோகஸ் Focus னும் புத்தகம் வழங்கப்பட்டது. அதனை இயக்குநர் சேரனுடன் சமீபத்தில் வெளியான கலகத்தலைவன் படத்தின் ஒளிப்பதிவாளர் தில்ராஜும் இணைந்து வழங்கினார்கள்




 

 

Comments

ISR Selvakumar said…
ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பில் மிக்க நன்றி!
PEOPLE TODAY said…
மிக்க நன்றி சார்

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,