ஆவடியில் 100 குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.

 திருவள்ளூர் மாவட்டம்

ஆவடியில் 100 குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.


ஆவடி டிச.26.

 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் நேற்று கிறிஸ்துமஸ் தின விழா மதியம் 2 மணி முதல் 5 மணி வரை கொண்டாடப்பட்டது. இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் குழந்தைகள் ஆடல் பாடல் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். உலகத்தில் அன்பும் பாசமும் ஒற்றுமையும் நிலைத்திருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. இந்த விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். 
அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. மொத்தத்தில் குழந்தைகள் அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் இந்த தினத்தினிலே இருந்தனர்கள் இந்த விழாவில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கோமளா அவர்களும் செயல்பாட்டாளர் ஹரிஷ் குமார், செயல்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பவித்தா ரஞ்சனி, ஆசிரியர்கள் ஜீவிதா, கீர்த்தனா, சக்தி, மதுமிதா, மற்றும் பவித்ரா ஆகியவர்கள் கலந்து கொண்டனர். 
இந்த விழாவில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் கேக் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது குழந்தைகள் மிக மகிழ்ச்சியுடன் உணவருந்தினர். மேலும் இந்த கிறிஸ்மஸ் தினத்தில் Principal கற்பகம் அவர்கள், வழக்கறிஞர் சிவகுமார் மற்றும் சர்வேயர் கருப்பையா ஆகியோர் குழந்தைகளுக்கு கேக் மற்றும் பிரியாணி வழங்கினார்கள்.
 


இறுதியாக, “அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினதில் நாமும் அன்பை விதைப்போம் அன்பால் உலகை ஆள்வோம். இந்த நல்ல நாளில்  உலக நாடுகள் ஒற்றுமையுடனும் உலக மக்கள் அன்புடனும் நோய் நொடி இல்லா வாழ்க்கை வாழ பிராத்தனை செய்யப்பட்டது.”Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,