ஜி20 கூட்டமைப்பின் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம்

 உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பர் 1-ம் தேதி இந்தியா ஏற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஜி20 அமைப்பின் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூடியது. 



இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், கலந்துக் கொண்டு இந்தியாவின் ஜி20 தலைமை பொறுப்பு குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.


 


ஜி20 – இந்தியா 


இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “2023-ம் ஆண்டுக்கான ஜி20 தலைமையை இந்தியா ஏற்றிருக்கும் வேளையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பாராட்டுகள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமை தரக்கூடிய ஒன்றாகும். உலக அளவில் பல்வேறு நாடுகளிடையே புரிதலை மேம்படுத்துவதில் நாம் மிக முக்கியப் பங்கை ஆற்ற வேண்டியுள்ளது. 



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,