சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா
சென்னையில் 20வது சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குதுங்கோ
2003 ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருது, இத்திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளை சென்ற சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருது.
இந்நிலையில் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவில் 48 நாடுகளை சேர்ந்த 107 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. கசடதபற ,பபூன், இறுதி பக்கம், ஓ2, கார்கி, நட்சத்திரம் நகர்கிறது, இரவின் நிழல், மாமனிதன், ஆதார் உள்ளிட்ட தமிழ் படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதில் சிறந்த படம் , சிறந்த 2வது படம், நடுவர்கள் சிறப்பு விருது, சிறந்த நடிகர் ,சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர் ,சிறந்த படத்தொகுப்பாளர் ,சிறந்த ஒலிப்பதிவாளர் ஆகிய எட்டு விருதுகளுடன் திரையுலகில் சிறந்து விளங்கிவரும் ஒருவருக்கு அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது உட்பட ஒன்பது விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இத்திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்துகொண்டு திரைப்படவிழாவை தொடங்கி வைக்கிறார்.
அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஒன்பது குறும்படங்கள் இங்கு திரையிடப்பட உள்ளன.
சத்யம் சினிமா வளாகத்தில் உள்ள நான்கு திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் உட்பட மொத்தம் ஐந்து திரையரங்குகளில் நான்கு காட்சிகள் வீதம் ஒவ்வொரு நாளும் 20 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது
From The Desk of கட்டிங் கண்ணையா!
Comments