பாரதி உலா 2022 இரண்டாவது நிகழ்ச்சி 06-12-2022

 






உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கமும், நம் உரத்தசிந்தனை தமிழ் மாத இதழும் இணைந்து எட்டாவது ஆண்டில் பயணிக்கும் பாரதி உலா 2022 இரண்டாவது நிகழ்ச்சி 06-12-2022, செவ்வாய்க்கிழமை மதியம் 2.30 மணிக்கு மேற்கு முகப்பேரி, சென்னை -600037. ல் உள்ள அமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது
.

இந்த நிகழ்ச்சியில்  பங்குபெறும் முக்கிய பிரமுகர்களையும் அரங்கில் இருந்த அனைவரையும் பள்ளியின் மாணவி செல்வி.ரம்யா அன்புடன் வரவேற்றார். 


உரத்தசிந்தனை பொதுச்செயலாளர் திரு.உதயம்ராம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த தலைவரையும், வாழ்த்துரை வழங்குவோரையும் அறிமுகப்படுத்தினார். பாரதி உலா -2022 -ன் இரண்டாவது நிகழ்ச்சியை தாங்கள் நடத்தும் பள்ளியில் நடைபெறவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திரு. அமுதா பாலகிருஷ்ணன், மற்றும் பள்ளியின் முதல்வர் திருமதி.கிறிஸ்டி ஜேம்ஸ் அவர்களைப் பாராட்டினார்.


"பாரதி பேச்சு பாரதத்தின் மூச்சு " என்ற இன்றைய பேச்சரங்கத்தில் பள்ளியின் மாணவி காவியா,

"மனதில் இனிமை வேண்டும் " என்ற தலைப்பிலும்,  ஸ்ரீஜா என்ற மாணவி, "பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்" என்ற தலைப்பிலும், விகாஷினி என்ற மாணவி, "சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே" என்ற தலைப்பிலும்,  தெபோராள் என்ற மாணவி, "குன்றென நிமிர்ந்து நில்" என்ற தலைப்பிலும்,  ஹேமாவதி என்ற மாணவி, "பெரிதினும் பெரிது கேள்" என்ற தலைப்பிலும்,  வினோதினி என்ற மாணவி, "பாரெலாம் புகழ் பரப்பும் பாரத நாடு" என்ற தலைப்பிலும் மிகவும் அருமையாக ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவுக்கு தாங்கள் பேசுவதின் பொருளறிந்து பேசி அரங்கத்தில் உள்ளவர்களின் மனதைக் கவர்ந்தனர்.


சிறப்பாக பேசிய மாணவியான காவியாவுக்கு முதல் பரிசாக Rs.1500/- , இரண்டாவது பரிசாக Rs.1000/. விகாஷினி என்ற மாணவிக்கும், மற்றைய நான்கு மாணவிகளுக்கு தலா Rs.500/- பரிசாக நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய திரு.J.பாலசுப்பிரமணியன் அவர்களும், சிறப்புப் பேச்சாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களும் பரிசளித்துப் பாராட்டினர்.


பள்ளி மாணவிகள் விகாஷினி, டினா டிலைலா பிரட், ஸ்ரீஜா, தெபோராள், சோபியா, சுபாஷினி, ஆகியோர்  பாரதியாரின் "ஓடி விளையாடு பாப்பா" , "வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி " என்ற இரண்டு பாடல்களுக்கும் புதிய விதமாகப் (FUSION இசையில்) பாடியதோடு, மேடையில் அற்புதமாக ஓடியாடி, நடனமாடி மகிழ்வித்ததைக் கண்டும் கேட்டும் அரங்கத்தில் இருந்தவர்கள் மெய்மறந்து இரசித்து கைதட்டி 

பாராட்டைத் தெரிவித்தனர்.


நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கலைமாமணி திரு.J.,பாலசுப்பிரமணியன், தனது உரையில் மாணவ மாணவிகள் பாரதி வாழ்ந்து காட்டிய தேசபக்தி, தெய்வபக்தி ஆகியவற்றைப் பின்பற்றி நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.


உரத்தசிந்தனை தலைவர் திருமதி. பத்மினி பட்டாபிராமன் அவர்கள் நிகழ்ச்சிக்கு அனுமதி தந்து முன்னிலை வகித்த திரு.அமுதாபாலகிருஷ்ணன், திருமதி.இராஜேஸ்வரி தம்பதிகளைப் பாராட்டியதோடு, சிறப்பாக  பங்குபெற்ற மாணவியர்களுக்கு பயிற்றுவித்த பள்ளி நிர்வாகத்தினரையும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.  


பிரபல விண்வெளி விஞ்ஞானி திரு.நெல்லை முத்து, திருமதி.லதா சரவணன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.


பிரபல எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவிகளின் பேச்சிலிருந்து சில முக்கியமான கருத்துக்களை எடுத்துரைத்து பாராட்டினார். இன்றைய நிகழ்ச்சி தனக்கு மனநிறைவு தந்தது என்றார். சிறப்பாக கல்வித் தொண்டாற்றும் அமுதாபாலகிருஷ்ணன் ஆதர்ஷதம்பதியர்களை வாழ்த்தி மகிழ்ந்தார். இந்த பள்ளியில் ஆங்காங்கு எழுதி வைத்துள்ள கருத்துப் பெட்டகமான வாசகங்கள் அனைத்தும் இந்த பள்ளியின் நிறுவனரின் மனதில் உதித்த வாசகங்கள் என்றும், இதைப்போல் 

எந்த பள்ளியிலும்

தான் பார்த்ததில்லை என்று கூறிப் பாராட்டினார். பாரதியார் ப பெண்விடுதலைக்கு முக்கியத்துவம் தந்து பாடல் இயற்றியுள்ளார் என்றும், அந்த காலகட்டத்தில் இருந்த சதி, பால்யவிவாஹம்,  பெண்களுக்கு இழைத்த பற்பல கண்மூடித்தனமான கொடுமைகளை  பாரதியார் தனது பாடல்கள் மூலம் சாடினார் என்றும், பாரதியாருக்கு முதன்முதலாக இதற்கான விழிப்புணர்வு தந்தவர் விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா அம்மையார் என்று  சிறப்புரை ஆற்றினார்.


இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக திரு.ராஜாராம்  ஒளிப்பதிவு செய்தார்.


நிறைவாக உரத்தசிந்தனை இணைச்செயலாளர் திரு.தொலைபேசி மீரான் நன்றியுரை கூறினார்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,