ஓய்வூதியர் தினவிழா (24.12.2022) சென்னை

  ஓய்வூதியர் தினவிழா 















தமிழ்நாடு  ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம், நடவடிக்கைக்குழு சென்னை தெற்கு/வடக்கு மாவட்டக்கிளைகளின் சார்பில் ஓய்வூதியர் தினவிழா இன்று (24.12.2022) சென்னை, ஆலந்தூர், ஏ. ஜே. எஸ். நிதி  மேல் நிலைப்பள்ளி கூட்ட  அரங்கில்      சென்னை (தெற்கு) மாவட்டத்தலைவர் தோழர் எஸ். ஜெகதீசன் தலைமையில்  நடைபெற்றது

. இக்கூட்டத்தில் சென்னை (தெற்கு) மாவட்ட துணைத் தலைவர் தோழர் வெ.திருநாவுக்கரசு துவக்கவுரையாற்ற ஆவடி வட்டக்கிளை செயலாளர் தோழர் டீ.குருமூர்த்தி, சென்னை (தெற்கு) மாவட்டப் பொருளாளர் தோழர் லோ.இரா.இராசேந்திரன், சென்னை (தெற்கு) மாவட்ட துணைத் தலைவர்கள் தோழர் து.ஜெயராமன்,  தோழர் பா.சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் சங்கத்தின் மேனாள் மாநில துணைத் தலைவர் தோழர் ஆ.ந.ஸ்ரீநாத், மேனாள்  மாநிலச்செயலாளர் தோழர் சி.இரத்னராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நடவடிக்கைக்குழுவின் செயலாளர் தோழர் எஸ்.துரைக்கண்ணு நிறைவுரையாற்றினார்.

 இக்கூட்டத்தில் 200 -க்கு மேல் ஓய்வூதியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி