ட்ரெண்டாகி வரும் அண்ணாமலை கையில் கட்டியுள்ள ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள வாட்ச்
கோவையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்திச்ச.போது அவரிடம் சமூக வலைதளங்களில், ட்ரெண்டாகி வரும் அவர் கையில் கட்டியுள்ள ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள வாட்ச் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுச்சு. அதற்கு பதிலளித்த அவர், "இப்போது புதிதாக, நாம் அணியும் சட்டை, வேட்டி, நடந்து செல்வது, கார், இவற்றையெல்லாம் ஒப்பிடுவதைத்தான் இப்போது புதிதாக ஆரம்பிச்சிருக்காய்ங்க..
நான் கையில் கட்டியிருக்கும் வாட்ச், ரபேஃல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து 500 வாட்ச்கள் செய்யப்பட்டன. அது ஒரு கலெக்டட் எடிஷன், ஸ்பெஷல் எடிஷன். இந்த வாட்சோட பெயரே, ரபேஃல் ஸ்பெஷல் எடிஷன். ரபேஃல் விமானத்தில் என்னவெல்லாம் பாகங்கள் இருக்கிறதோ, நான் கட்டியிருக்கும் வாட்ச்சில், அந்த பாகங்கள் எல்லாம் இருக்கிறது. எனக்கு ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கவில்லை. ஏனென்றால் நான் ஒரு பெரிய தேசியவாதி. ரஃபேல் விமானத்தை ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைக்கல, அதனால், அந்த ரஃபேல் விமானத்துக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய இந்த வாட்சை கட்டியிருக்கிறேன். அந்த 500 வாட்ச் செய்யப்பட்டதில் 149-வது வாட்ச் என்னுடையது.
இதில் பார்த்தால் தெரியும். Dassault Aviation இவர்கள்தான் ரஃபேல் விமானத்தை உருவாக்குபவர்கள். அந்த ரஃபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து இந்த வாட்ச் செய்யப்பட்டது. உலகத்தில் 500 வாட்ச்கள்தான் இருக்கிறது. அதனால், என் உடம்பில் உயிர் ஓடுகிற வரைக்கும் இந்த வாட்ச் என்னிடம் இருக்கும்.
உலகம் முழுவதும் உள்ள கலெக்டட் எடிஷன். ரஃபேல் விமானத்தின் வாட்சை நம்மைத் தவிர யார் வாங்குவார்கள்? இந்தியர்கள்தான் வாங்க முடியும். அதனால், நம்முடைய நாட்டிற்காக ரஃபேல் விமானத்தின் பாகங்களில் இருந்து Dassault Aviation நிறுவனத்தால் செய்யப்பட்ட வாட்சை நான் கட்டியிருக்கிறேன். ஏன் என்றால் நான் தேசியவாதி. நான் பிரிவினைவாதம் பேசுகிறவன் கிடையாது.
ரஃபேல் நம் நாட்டிற்குக் கிடைத்திருக்ககூடய மிகப்பெரிய பொக்கிஷம். ரஃபேல் விமானத்தின் வருகைக்குப் பின்னர், rules of war மாற ஆரம்பித்துள்ளது" என்று அவர் கூறியிருந்தார். இது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி வருகிறது.
அடிசினல் ரிப்போர்ட் From The Desk of கட்டிங் கண்ணையா
அண்ணாமலை குறிப்பிட்ட இந்த ரபேல் வாட்ச் என்பது பிரான்ஸ் நாட்டின் போர் விமானம் ஆகும். டஸால்ட் நிறுவனத்தின் இந்த போர் விமானத்தைதான் இந்தியாவும் பயன்படுத்தி வாராய்ங்க. இதற்கான போடப்பட்ட மோடி அரசின் ரபேல் டீலிங்கில் ஊழல் புகார்கள் சர்ச்சையாச்சு.
இந்த டஸால்ட் நிறுவனமும் பிரபல வாட்ச் தயாரிப்பு நிறுவனமான பெல் அண்ட் ராஸ் நிறுவனமும் அவ்வப்ப்போ இணைஞ்சு சிலபல அறிவிப்புகளை வெளியிடுவாய்ங்க. அந்த வகையில் டஸால்ட் நிறுவனத்தின் போர் விமானங்களை பறைசாற்றும் விதமா பெல் அண்ட் ராஸ் நிறுவனம் ஏகப்பட்ட வாட்ச் சீரிஸ்களை வெளியிட்டிருக்குது. ரபேல் வாட்ச் அந்த வகையில் பல்கான் போர் விமானத்தை பாராட்டும் விதமாக அதன் 50ம் ஆண்டு விழாவில் பல்கான் போர் விமான மாடல் வாட்சை பெல் அண்ட் ராஸ் நிறுவனம் வெளியிட்டுச்சு. அதன்பின் ரபேல் விமானத்தின் பெருமையை பறைசாற்றும் விதமாக சில வருடங்களுக்கு முன் ரபேல் மாடல் வாட்சுகளை வெளியிட்டது.
இந்த மாடல் வாட்சுகள் இந்திய ரூபாயில் அப்ப 4.40 லட்சத்திற்கு விற்பனை ஆச்சு. இதில் மொத்தம் 500 மாடல்கள் மட்டுமே உலகம் முழுக்க தயாரிக்கப்பட்டு. அப்போதே புக் செஞ்ச 500 பேருக்கு மட்டுமே உலகில் இந்த வாட்ச் கிடைச்சுது. இந்த வாட்சைத்தான் அண்ணாமலை பயன்படுத்தி வாறாராம்.
ஆட்டோமேட்டிக் டைப் வாட்சான இது சகல இடங்களில் கூட பயன்படுத்தும் அளவிற்கு வலிமையானது. இதன் கேசிங் செராமிக் மூலம் செய்யப்பட்டது. ரபேல் விமானங்களின் பல்வேறு பாகங்கள் செராமிக் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். இது மிகவும் வலிமையாக இருக்கும்.
சகல விதமான வானிலையையும் தாங்கும். நிறம் குறையாது. ரபேல் விமானத்தின் அதே லைட் கிரே நிறத்தில் இதில் உருவாக்கப்பட்டு இருக்குது. இதன் பேண்ட் மட்டும் ரப்பரில் உருவாக்கப்பட்டது.
ரபேல் விமானம் உள்ளே இருக்கும் வாட்ச் அப்படியே ரபேல் விமானத்தில் இருக்கும் மீட்டர் போலவே வடிவமைக்கப்பட்டு இருக்கும். முள் கூட ஆரஞ்சு நிறத்தில் வைக்கப்பட்டு இருக்கும். ஏரோஸ்பேஸ் துறையில் செராமிக் மிக முக்கியமான பொருள் என்பதை அதை இதில் பயன்படுத்தி இருக்காய்ங்க.
ஆசிட் வீச்சை கூட தாங்கும் திறன் கொண்டது ஆகும் இது. வழக்கம் போல் வாட்டர் ஃப்ரூப் திறன் கொண்டது ஆகும். sapphire கிளாஸ் இதன் கண்ணாடியில் பயன்படுத்தப்பட்டு இருக்குது
Comments