திருவெம்பாவை- பாடல் 4

 திருவெம்பாவை- பாடல் 4



ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ


 வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ

 எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்


 கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே

 

 விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்


 கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்

 

 உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து


 எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்


"தோழியர் எல்லோரும் வந்துவிட்டார்களா.. என்னை வந்து ஏன் இப்போது எழுப்புகின்றீர்கள்"


 "ஆஹா.. இப்படியா கேட்கிறாய்.. என் தோழியே..


 நாங்கள் எல்லோரும் வந்தாயிற்று.


விண்ணுலகம் போற்றுகின்றதான வேதத்தின் பொருளாகிய ஈசனை உள்ளம் உருகி பாடித் தொழுதிட தோழியர் எல்லோரும் வந்துவிட்டோம்..


 நீ என்னவென்றால் துயில் கலைந்த பின்பும்  எழுந்து தயாராகாமல் மஞ்சத்திலேயே படுத்துக் கொண்டு, வீணில் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பதோடு அல்லாமல் எல்லோரும் வந்துவிட்டார்களா என்று வினா எழுப்புகின்றாய்..


நாங்கள் எல்லோரும் வந்துவிட்டோம்..


உனக்கு ஐயம் இருந்தால் எழுந்து வந்து எண்ணிப் பார்த்துக் கொள்..


 நீ சந்தேகம் கொள்வது போல யாராவது உண்மையிலேயே வரவில்லை என்றால் போய்த் தூங்கு !!!! எங்களுக்கு என்ன ?




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,