#AvatarTheWayOfWater நாளை டிசம்பர் 16 வெள்ளிகிழமை உலகம் முழுக்க ரிலீஸ்

 


🔥
#AvatarTheWayOfWater நாளை டிசம்பர் 16 வெள்ளிகிழமை உலகம் முழுக்க ரிலீஸ் ஆகப்போகுது
அதுக்கு முன்னாடி ஓருசில சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிஞ்சுக்கலாமா?..
இந்த படம் ரிலீஸ் ஆனா உலகத்துலயே அதிக பொருட்செலவுல உருவான படம்னு சாதனை படைக்கும் இதுக்கு முன்னாடி Pirates Of the Carribean Franchise'ல 4வது பாகம் Stranger Tides படம்தான் உலகிலேயே அதிக செலவில் உருவான படம் அந்த படத்தோட பட்ஜெட் 379 மில்லியன் ஆனா அவதார் 2ம் பாகத்தோட பட்ஜெட் 390 to 420 மில்லியன்னு சொல்ராங்க சரியான தொகை படம் ரிலீஸ்க்கு அப்புறம் தான் தெரியவரும்...
Avatar படத்துல மொத்தம் 5 Part ரிலீஸ் பண்ண கேமரூன் பிளான் பண்ணி வச்சிருக்காரு அதுல 2ம் பாகம் நாளைக்கு ரிலீஸ் ஆகப்போகுது 3 பாகத்தோட ஷூட்டிங் 90% முடிச்சு ரிலீஸ்க்கு ரெடியா இருக்கு அந்த படம் 2024 டிசம்பர் 24தேதி ரிலீஸ் ஆகும்
2 மற்றும் 3 பாகம் மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு பெற்றால் மட்டும்தான் 4 மற்றும் 5 பாகம் ஷூட் பண்ண ஸ்டார்ட் பண்ணுவாங்க மாறாக 2,3 பாகம் போதுமான வரவேற்பு கிடைக்காட்டி 3 பாகத்தோட இந்த படம் ட்ராப் ஆகிடும்..
இந்த Franchise'ல முதல் பாகமான அவதார் 2009'ல ரிலீஸ் ஆச்சு அந்த படத்தோட கதை எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.. அந்த படம் 2154'ல நடக்குற கதை இந்த படம் அதுல இருந்து 13 வருசத்துக்கு அப்புறம் 2170 காலகட்டத்துல நடக்குற கதை பண்டோற கிரகத்துல வாழ்ந்த அந்த அவதார்ஸ் Water Trap'ல வாழறதும் அவங்கள அட்டாக் பண்ண ஒரு கூட்டம் வரதும் தான் இந்த படத்தோட கதையா இருக்கும்..கிட்டத்தட்ட 13 வருசத்துக்கு அப்புறம் கேமரூன் ரிஸ்க் எடுத்து உருவாக்குன ஓரு ப்ரோஜெக்ட் முக்கியமா ரொம்ப Risky ஆன UnderWater Motion Capture எடுக்கவே இந்த 13 வருஷம் போயிருக்கு அந்த Motion Capture எல்லாம் எப்டி இருந்துச்சுனு அவதார் படம் போன மாசம் ரீ ரிலீஸ் ஆன டைம்ல End சீன்ல 3 நிமிஷம் வீடியோ பார்த்தவங்களுக்கு புரிஞ்சு இருக்கும்...
இன்னும் ஒருசில சுவாரஸ்யமான விஷயம் என்னனா 2009 அவதார் படத்துல நடிச்ச எல்லாம் நடிகர்களும் இதுல திரும்பி வராங்க அதுல புதுவரவாக kate winslet இந்த படத்துல நடிச்சிருக்காங்க..
2009 அவதார் படம் ரிலீஸ் டைம்ல இங்கிலிஷ்ல மட்டும்தான் ரிலீஸ் ஆச்சு ஆன இந்த படம் அப்டி இல்ல இந்தியாவுலேயே மேஜர் ஆன தமிழ்,ஹிந்தி,கன்னட,மலையாளம்,தெலுகு,னு எல்லா மொழிலயும் ரிலீஸ் ஆகுது உலகம் முழுக்க 150 மொழிகலில் IMAX,4DMAX,3D'னு பெரிய \ரிலீஸ் ஆகுது So இங்கிலிஷ் படம்னு நினச்சு பாக்காம இருக்காதிங்க.. Tamil,malayalam,hindi உங்களோட Comfortable Language எதுவோ அந்த மொழில இந்த படம் இருக்கு இந்த படம் வசூல்ரீதியா பெரிய வருமானம் கிடைச்சாதான் 4,5 பாகம் நம்மளால பாக்க முடியும் முடிஞ்சு 1க்கு 3 தடவ கூட தியேட்டர்ல பாருங்க காரணம் இந்த மாதிரி படங்கள் எல்லாம் Decade'ல வரக்கூடிய படங்கள்..
இனிமேல் இந்த மாதிரி டெக்னாலஜி படங்கள் வரலாம் வராமலும் போகலாம் So OTT'ல வரட்டும் பாப்போம்னு கண்ணனுக்கு குளிர்ச்சியான டெக்னாலஜி படத்தை மிஸ் பண்ணிடாதீங்க 2009 அவதார் படம் பார்த்து வியந்துபோன நாம 13 வருசத்துக்கு அப்பறம் இன்னும் அட்வான்ஸ் டெக்னாலஜியோட படம் வரப்போகுது கண்டிப்பா மறந்துகூட மிஸ் பண்ணிடாதீங்க
உலகம் முழுக்க நாளைக்கு டிசம்பர் 16தேதி படம் ரீல்ஸ் ஆகுது உங்க வீட்டு பக்கத்து தியேட்டர்லயும் படம் இருக்கு பாருஙக கண்ணனுக்கு குளிர்ச்சியான ஸ்டன்னிங் விஷுவல்ஸ் என்ஜாய் பண்ணுங்க.
From The Desk of கட்டிங் கண்ணையா!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,